நாட்டின் பல பகுதிகளில் மழைபெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2017 (புதன்கிழமை)
நாட்டில் மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை காணப்படும்.
வடக்கு வடமத்திய கிழக்கு ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை காணப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களளை அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.