நாளை LIMA17 லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2017 (திங்கட்கிழமை)
லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017 (Langkawi International Maritime and aerospace exhibition - LIMA17) நாளை மலேசியாவின் லங்காவி என்னும் பகுதியில் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து 5 தினங்கள் இடம்பெறும் இந்தக் கண்காட்சியானது ஆசியாவின் பசுபிக் பிராந்தியத்தில் (Asia-Pacific region) ஈராண்டுகளுக்கொருமுறை நடைபெறுகின்ற மிகப்பெரிய கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சியாகும்.
1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 14வது தடவையாக இந்த கண்காட்சி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த கண்காட்சியில் அனைத்து நாடுகளிலிருந்தும் பாதுகாப்பு மற்றும் வணிகவியல் துறைகளுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்குபற்ற உள்ளனர்.
இந்தக் கண்காட்சியானது மலேசிய அரசாங்கம் மற்றும் பல தொழிற் ஸ்தாபனங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.