நெடியகாடு சூப்பர் 8 உதைபந்து நேற்று மின்னொளியில் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக மாபெரும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை (Northern Challengers cup-2016) நடாத்தி வருகின்றது. நேற்றைய தினம் (16-02-2017) சூப்பர் 8 சுற்று லீக் போட்டிகள் பிரம்மாண்டமான ஏற்பாட்டில் 'வட இலங்கை புகழ் நெடியகாடு கணபதி மின் அமைப்பாளர்களின்' மின் ஒளியில் ஆரம்பமானது.
முதலாவது போட்டியாக இரவு 7 மணிக்கு குருநகர் பாடும்மீன் வி.க எதிர் மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய அணி மோதியது. இப் போட்டியில் குருநகர் பாடும்மீன் கழகம் விடத்தல்தீவு அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது .
இரண்டாவது போட்டியில் இளவாலை யங்கென்றீஸ் எதிர்த்து மன்னார் யோசப் வாஸ் நகர் ஐக்கிய அணி மோதியது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.