தென்கொரியாவிற்குச் சொந்தமான Stellar Daisy (Ore carrier) என்னும் 321 மீட்டர் நீளமான கப்பல் ஒன்று, தென் அட்லாண்டிக் சமுத்திரத்தில் காணாமல் போயுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. உருகுவே நாட்டை அண்டிய கடற்பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்த பொழுது, கப்பலுக்குள் நீர் புகுந்ததைத் தொடர்ந்து கப்பலில் இருந்து அபாய அறிவிப்பு (distress signal) விடுக்கப்பட்டதை தொடர்ந்தே இது இடம்பெற்றுள்ளது.
கடந்த மார்ச் 26 ஆம் திகதி பிரேசிலில் இருந்து சீனாவிற்கு கப்பல் பயணித்துக் கொண்டிருந்த பொழுது நேற்று முன்தினம் கப்பலில் நீர் புகுந்ததை தொடர்ந்து கப்பல் உடனான தொடர்பு துண்டிக்கபப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் 16 தென் கொரிய மாலுமிகளும் 8 பிலிப்பைன்ஸ் மாலுமிகளும் இருந்துள்ளனர்.
உருகுவே நாட்டு கடற்படையினர் (Uruguayan navy) பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர் என Maritime Herald செய்தி வெளியிட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.