ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை நாடாத்தப்ப்பட்டது.
இந்த நிலையில் தான் சென்ற வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டகாரர்களின் கோஷத்தை செவிமடுத்த ஜனாதிபதி தான் சென்ற வாகனத்தை இடைவழியில் நிறுத்தி இறங்கியுள்ளார்.
பாதுகாவலர்களையும் மீறி தனது வாகனத்திலிருந்து இறங்கிய மைத்திரிபால சிறிசேன போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்துள்ளார்.
இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு உரத்து கோஷம் எழுப்பியுள்ளதுடன், வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் ஜனாதிபதியுடன் உரையாடியிருந்தனர்.
கீழே படத்தில் ஜானதிபதியுடன் ஆவேசமாக உரையாடும் சிவாஜிலிங்கம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.