பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்திய 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று பருத்தித்துறை ஐக்கியம் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் இரவு 8:00 மணிக்கு ஆரம்பமானது.
இறுதிப்போட்டியில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோலினை பெற முதல் பாதியாட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் வல்வை ஆதிசக்தி அணி ஒரு கோலினைப் பெற ஆட்டநேர முடிவில் 2:1 என்ற கோல் கணக்கில் சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்தை வெற்றி கொண்டு 40 வயதிற்கு மேற்பட்டோறிக்கான வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கியது வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.