120 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழுக்கல் மடம் புனரமைப்பு (திருத்திய பதிப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2017 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் திருவிழாவான திருக்கல்யாணத் திருவிழா அன்று வாலாம்பிகாதேவி தவக்கோலத்தில் காட்சி தருகின்ற வழுக்கல் மடம் புனரமைக்கப்பட்ட்டுள்ளது.
வல்வை வாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்தின் மேற்கு வீதியில் அமைந்துள்ள 120 வருடம் பழைமை வாய்ந்த இந்த மடம் கெச்சுத் தண்டையல் திரு. நா. வேலுப்பிள்ளை அவர்களின் மகன் திரு. நா. வே. இராமசுவாமி அவர்களால் 1898ம் வருடம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதனை சிட்னியில் வசிக்கும் அவரின் அன்புப் பேரன் அவர்கள் பங்குனி 2017 ல் புனரமைத்துள்ளார்.
இப் புனரமைப்புப் பணியை மேற்பார்வை செய்யும் பொறுப்பினை வல்வை சிவத் தொண்டர் ஒருவர் ஏற்று சிறப்பாக நிறைவு செய்துள்ளார்.
கீழே படத்தில் வழுக்கல் மடத்தின் புதிய மற்றும் பழைய தோற்றதத்தினைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.