வல்வெட்டித்துறை காட்டுப்புலம் அருகே கேரள கஞ்சாவுடன் மூவர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2017 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை காட்டுப்புலம் பகுதியில் 118 கிலோ கேரளா கஞ்சாசவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கேரள கஞ்சா தொகை கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இன்று (11) அதிகாலை சந்தேகநபர்கள் வல்வெட்டித்துறை காட்டுப்புலம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களிடமிருந்து 118 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையை சேர்ந்த 25, 27 மற்றும் 36 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர்களை இன்று பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேற்கண்டவாறு Newsfirst.lk செய்தி வெளியிட்டுள்ளது.
காட்டுப்புலம் ஆனது வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பிரதான வீதியில் வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து சுமார் 2 1/2 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: February 12, 2017 at 03:45
எமது இளையசமுதாயத்தை பணத்துக்காக சீரழிப்பவர்கள் யாரக இருந்தாலும் கடுமையான தண்டனைவழங்கப்படவேண்டும் .மக்கள் விழிப்பாக இருங்கள் எமது அடுத்த தலைமுறையை சிந்திக்கவிடாது அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி சீரழிப்பதற்கே செயல்பட்டுகொண்டிருக்கின்றார்கள் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.