அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன் அவர்களின் பிரிவுச் செய்திகேட்டு எமது துயரில் நேரில் பங்கெடுத்தும், தொலைபேசி, முகநூல், குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் ஆறுதல் கூறியும், இறுதிக்கிரிகைகளில் கலந்து கொண்டு, உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் 31ம் நாள் கிரிகைகள் எதிர்வரும் 06/04/2024 சனிக்கிழமை அன்று காலை 5.00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊரணி அந்தியேட்டி மடத்தில் அந்தியேட்டியும் மதியம், அன்னாரின் இல்லத்தில் ( ஆலடி ஒழுங்கை, வல்வெட்டித்துறை ) 12.00 மணிக்கு வீட்டுக்கிரிகையும் அதனைத் தொடர்ந்து மதியபோசனமும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.