பருத்தித்துறை கடலில் 2 படகுகள், 4 மீனவர்களை காணவில்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2026 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில், அதில் மீன் பிடிக்கச் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களை தேடும் நடவடிக்கையில் அப்பகுதி மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக குறித்த சம்ப்வம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை - முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து நேற்று முந்தினம் (27) புதன்கிழமை கடலுக்கு சென்ற நான்கு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கதிர்காமம் சோதிலிங்கம் (வயது 52), சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (வயது 37) மற்றும் கற்கோவளம் பகுதியை சேர்ந்த சேர்ந்த பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஸ்ணன் (வயது 54) மற்றும் அவரது மகனான இராமகிருஸ்ணன் ரவிராஜ் ஆகியோர் காணாமல் போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. (Udupiddy news)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.