இன்றைய நாளில் - 83 ஆடிக்கலவரமும், குட்டி மணி தங்கத்துரை படுகொலை நிகழ்வும்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2022 (சனிக்கிழமை)
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே நாள் யாழ் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்துக்கு எதிராக மேற்கொண்ட கெரில்லா தக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிராக பாரிய வன்முறைகள் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் வெலிக் கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் பலரும் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் தமிழர் ஆயுத விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான திரு.குட்டிமணி, திரு. தங்கதுத்துரை மற்றும் ஜெகன் ஆகியோரும் அடங்குவர்.
யூலைக் கலவரம் சம்பந்தமாக wikipediaவில் பதியப்பட்டுள்ள குறிப்பு கீழே
கறுப்பு யூலை (Black July; சிங்களம்: කළු ජූලිය) என்பது இலங்கையில் 1983 சூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளைக் குறிக்கும். இப்படுகொலைகள் திட்டமிடப்பட்டு நடந்தேறியவை ஆகும். 1983 சூலை 23 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால்யாழ்ப்பாணத்தில்இலங்கை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னணியே இப்படுகொலைகளுக்குத் தூண்டுதலாக இருந்தது எனக் கூறப்படாலும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சிறில் மத்தியூ மற்றும் கட்சி உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு, விரைவில் சிங்களப் பொதுமக்கள்:இன் பங்கேற்புடன் தமிழருக்கு எதிரான வன்முறைகளாக மாறியது.
1983 சூலை 24 இரவு, தலைநகர் கொழும்பில்தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. ஏழு நாட்களில், முக்கியமாக சிங்களக் கும்பல் தமிழரைத் தாக்கினர், உயிருடன் எரித்தனர், படுகொலைகளைப் புரிந்தனர், உடமைகளைக் கொள்ளையடித்தன. இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது, 150,000 பேர் வீடற்றவர்களாயினர்.ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன.இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு $300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது.பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 திசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இப்படுகொலைகளை ஒரு இனப்படுகொலை என்று விவரித்தது.
இவ்வினப்படுகொலைகளின் விளைவாக இலங்கைத் தமிழர்கள் பலர் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றனர், மேலும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் போராளிக் குழுக்களில் சேர்ந்தனர். கறுப்பு யூலை என்பது பொதுவாக தமிழ் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.சூலை மாதம் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழரின் நினைவு மாதம் ஆனது.
பொரளை பேருந்து நிலையத்திற்கு அருகில் சிங்களக் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் தமிழ் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டுள்ளார்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.