துரைரெத்தினம் எம்.பி - இலங்கைத் தமிழர்களின் அரசியல் முதுசம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2016 (திங்கட்கிழமை)
முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் (பருத்தித்துறை M.P) அமரர் கதிரிப்பிள்ளை துரைரெத்தினம் அவர்கள் பற்றிய கட்டுரை ஒன்று, கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
வல்வெட்டிதுறைக்கே மட்டுமல்லாது இலங்கைத் தமிழனத்திற்கே கிடைத்த ஒரு அரசியல் முதுசமாக விளங்கும் அமரர் க.துரைரத்தினத்தின் வெற்றிடம் இன்றும் வல்வெட்டித்துறையின் அரசியலில் மட்டுமின்றி வட அரசியலிலும் காணப்படுகின்றது என கீழே கட்டுரையின் இறுதியில் வரையப்பட்டுள்ளது.
கட்டுரையை எமது இணையதள (Valvettithurai.org) வாசகர்களுக்கு அனுப்பி, வல்வை ஆவணக்காப்பகத்திலுள்ள க.துரைரெத்தினம் அவர்களின் அரசியல் வாழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விளக்கங்களையும் தந்துள்ளார்கள் திரு.திருமதி உமா நகுலசிகாமணி தம்பதியினர்.
7 -2 -1971ல் தமிழர் விடுதலைக்கூட்டணி ஆரம்பக்கூட்டம் வல்வையில்
வர்த்தகர் திரு.செ.தங்கவடிவேல் வீட்டில்
ஆழிக்குமரன் ஆனந்தனுக்கு நடந்த வீர வரவேற்பு 1963ல் ரேவடி மைதானத்தில்
சட்டத்தரணியாக துரைரத்தினம் அவர்கள்
1961 இல் யாழ் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு வல்வையர்கள் நடையாக சென்றபோது, திரு.வ.இ.மணி, திரு.அத்தண்ணா
1981இல் மதுரை தமிழாராய்ச்சிமாநாட்டிற்கு சென்ற போது.ஆவணகாப்பக உரிமையாளர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் குடும்பத்தினர், நடுவில் ந.நகுலசிகாமணி,அருகில் துரைரெத்தினம் தம்பதியினர்
தஞசை சரஸ்வதிமஹால் நூல்நிலையத்தில் ஏட்டுச்சுவடிகளை பார்வையிடுதல். துரைரத்தினம் தம்பதியினருடன் அருகில் திரு.ஈழவேந்தன்
மன்னார் வழியாக கப்பலில் இராமேஸ்வரம் ஊடாக மதுரை சென்றபோது, திரு.ஜனார்த்தனம், கோவை மகேசன், திருமதி.யோகேஸ்வரன்
தேர்தல் பிரச்சாரத்தின்போது பருத்தித்துறைக் கடற்கரை மைதானத்தில்
வல்வை சந்தியில் திரு.பிரேமதாசா உதவி உள்ளுராட்சி மந்திரியாக வந்தபோது. அருகில் சிதம்பரா சாரணராக திரு.பா.நடேசன்
தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்த புகைப்படம்..........
துரையப்பா கொலைவழக்கு குற்றவாளிகள் எனக் குற்றம் சாட்டப்படிருந்த கலாபதி, கிருபாகரன், இன்பன், ஸ்ரீதரன், சந்ததியார், யோகராசா, செல்வம் ஆகியோர்களுடன் மு.சிவசிதம்பரம், வி.தர்மலிங்கம், அ.அமிர்தலிங்கம் மற்றும் துரைரத்தினம்
1965 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வடக்கு கிழக்கு வேட்பாளர் பட்டியில் கீழ் பகுதியில் திரு.துரைரெத்தினம் அவர்கள். இவர்களில் தற்போது வாழ்பவர் திரு.இராஜதுரை (மட்டுநகர்). நடுவில் தந்தை செல்வா அவர்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.