Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (33) – இவர்கள்தான் கெளரவிக்கப்படவேண்டும்

பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2018 (சனிக்கிழமை)
நம்மவர்களுக்கு ஒரு பழக்கம். ஒன்று மற்றவரை கொப்பியடிப்பது அல்லது செய்ததையே திருப்பித்திருப்பிச் செய்வது. ‘மாத்தியோசி’க்கும் வழக்கம் குறைவு.
 
அண்மைய டிரென்ட் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து கெளரவிப்பு. தரம் ஐந்து புலமைப்பரிசில் சித்திபெற்ற மாணவர், க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) பரீட்சை, போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் என பல இடங்களில் பல விழாக்களின் போது பரீட்சைகளில் சித்திபெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்படுகின்றார்கள்.  இதில் குறைகூற ஒன்றுமில்லை. 
 
இது எந்தளவுக்கு பரிசில் பெறும் குறித்த மாணவர்களை உற்சாகப்படுத்துகின்றது என்றும் ஏனைய மாணவர்கள் மீது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்றும் சரியாகத் தெரியவில்லை. 
 
ஆனாலும் குறித்த பரீட்சைகளில் சித்திபெறும் மாணவர்களை ‘கல்விச் சாதனையாளர்கள்’ என்றுகூறி, நியத்தில் சாதனைகள் ஏற்படுத்தும் ‘சாதனையாளர்’ களின் பெயரை பிரயோகிப்பது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று, மற்றவர் ஏளனம் செய்வதற்கு இடம் கொடுக்கக்கூடாது.
 
எனது மகள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்றபோதும், பல சான்றிதழ் வழங்கும் வைபவங்களுக்கு அழைத்திருந்தார்கள். வழங்கியவர்கள் வங்கிகள், அரசியல் பிரமுகர்கள். என்ன காரணம் என்றுகூற வேண்டிய அவசியமல்ல. மகளுக்கும் கடைசியில் அலுத்துவிட்டது, கூட்டிக் கொண்டு போய் வந்ததில் எங்களுக்கும் அலுத்துவிட்டது.
 
(குறிப்பு – பண மழை, பரிசில் மழை எல்லாம் GDP குறைந்த ஊர்ப்பக்கங்களில் தான், GDP கூடிய தலைநகரில் சான்றிதழ் மட்டும் தான்).  
 
சில மாதங்கள் முன்பு நண்பன் மாணிக்கலிங்கம் வரதன் Facebook இல் ஒரு பதிவை இட்டிருந்தான்.
 
குறித்த பதிவில் சில பந்திகளை நீக்கிவிட்டு ஏனையவற்றை அப்படியே கீழே இணைத்துள்ளேன். 
 
அண்மையில் ‘இலங்கையின் தற்போதைய அரசியல் நிலமையும் தமிழர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கு பேசப்பட்ட பல முக்கிய விஷயங்களில் ஒன்று இன்று உங்கள் சிந்தனைக்காக...
 
பின்வரும் விடயம் இலங்கையில் இறுதியாக 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற சனத்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. முடிந்தவரை சுருக்கமாக தர முயற்சிக்கிறேன். முக்கியம் கருதி தொடர்ந்து வாசிக்கவும்.
 
வடமாகாணத்தில் வாழும் மக்களில் அண்ணளவாக 10 இலட்சம் தமிழர்கள். (99%). ஒப்பீட்டளவில் பலமான நிலை.
 
கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 15 இலட்சம். இதில் தமிழ் மக்களின் தொகை அண்ணளவாக 6 இலட்சம் பேர். கிழக்கு மாகாண சனத்தொகையில் பாதியளவு கூட இது இல்லை. அதிலும் குறைவு. இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் தமிழ் மக்களின் விகிதாசாரம் என்பது 75% ற்கும் அதிகமாக இருந்தது. 
 
(பந்தி அகற்றப்பட்டுள்ளது)
 
வடக்கு கிழக்குற்கு வெளியே தென்பகுதியில் வாழும் தமிழர்களது எண்ணிக்கை அண்ணளவாக 15 இலட்சம்பேர்.  இலங்கை தீவு முழுவதிலும் வாழும் தமிழர்களின் மொத்த எண்ணிக்கை (இலங்கைத் தமிழர் + இந்திய வம்சாவழித் தமிழர்) அண்ணளவாக 31 இலட்சம் பேர்.
 
இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் இருப்பு இலங்கைத் தீவில் தொடர்ந்தும் பலமாக இருக்க வேண்டுமானால் வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதே ஒரே வழி. இதற்கான பேரம் பேசலுக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர் சனத்தொகை மொத்த சனத்தொகையில் பாதியளவு தன்னும் இருக்க வேண்டும். அதாவது அண்ணளவாக குறைந்தது 2 இலட்சம் பேரால் அதிகரிக்க வேண்டும். இதே வேளை அங்குள்ள ஏனைய மக்களின் சனத்தொகையும் அதிகரிக்கும் என்பதை கருத்திற் கொள்க....
 
குறிப்பாக கிழக்கு மாகாண எமது சொந்தங்கள் , தமிழர்களாக நாம் அனைவரும் இனியாவது இந்தநிலை மேலும் மோசமடையாது எமது இருப்பை தக்கவைக்க என்ன செய்யப் போகிறோம்?
 
(பந்தி நீக்கப்பட்டுள்ளது)
 
குறிப்பு: யுத்தம் ஆரம்பிக்க முன்பாக படிக்கும் போது இலங்கையின் தமிழர் சனத்தொகை (80களின் ஆரம்பத்தில்) 35 இலட்சம் எனப் படித்ததாக ஞாபகம். அதன் பின்னர் 35 வருடங்கள் கடந்து விட்ட இன்றைய நிலையில் தமிழரது சனத்தொகை மட்டும் கூடவில்லை. மாறாக குறைந்துள்ளது. ஆனால், ஏனைய இனங்களின் சனத்தொகையோ........!!!!!!
இனியாவது சிந்திப்போமா உறவுகளே!
 
இதுதான் நண்பனின் பதிவு.
 
ஊரில் கெளரவிக்கப்படவேண்டியவர்கள் பல துறைகளைச் சேர்ந்தவர்கள், சேராதவர்கள் என பலர் உள்ளார்கள். அவற்றில் இரண்டை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன். 
 
1) ஊரில் அதிக பிள்ளைகள் பெற்றவர்களை ஒருமுறையாவது கெளரவியுங்கள். அறிந்தோ அறியாமலோ தமிழர்கள்   இருப்பிற்கு பலம் சேர்க்கும் இவர்கள் போன்றவர்கள் ஒருமுறையாவது மேடை ஏற்றப்படவேண்டியவர்கள்.
அம்மாச்சி அப்பா - 10 பிள்ளைகள் பெற்ற
எனது பாட்டனும் பாட்டியும் 
2) குடும்பத்தில் சகல பிள்ளைகளுக்கும் தூய தமிழ் பெயர்கள் சூட்டியுள்ள பெற்றோர்களைக்
கெளரவியுங்கள்.

நாம் பலரை கெளரவிக்கத் தவறியிருக்கின்றோம். அவர்களில் சிலர் அன்றும் இன்றும் அம்மன் கோயில் திருவிழாக் காலங்களில், திருவிழா நிகழ்வுகளில் ஈடுபடாது பல வருடங்களாக தாக சாந்தி அளித்து வந்த இரண்டு பெண்மணிகள். பிறந்ததிலிருந்து நாற்பது வருடங்களுக்கு மேலாக எங்களுக்கு உருக் கொடுத்துக் கொண்டிருக்கும்  பறை வாத்தியக் கலைஞன் குமாரையும் கெளரவிற்க தவறியுள்ளோம்.

அண்மையில் வல்வை மாலுமிகள் சங்கம் வல்வையின் ஆவணக் காப்பாளரான திரு. நகுலசிகாமணி அவர்களை கெளரவித்திருந்தது. வித்தியாசமான கோணத்தில் வேறும் மூவரை கெளரவம் செய்ய முயற்சித்தார்கள். ஆனாலும் சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துவிட்டார்கள். இந்த விடயத்தில் மாலுமிகள் சங்கத்துக்கு ஒரு சலாம் போடலாம். ஆனாலும் திருமதி உமா நகுலசிகாமணிக்கும் கெளரவம் செய்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

வித்தியாசமாக கெளரவியுங்கள். அது எமது இனத்துக்கும், மொழிக்கும் நீங்கள் செய்யும் பெரியொதொரு கடமையாக  அமைந்துவிடும். 
 
கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன் 
TP – 00 94 777 64 99 55 (Viber, Whats up)
Face book – athiroobasingam.athavan   

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
Yogaguru anandamyle (Now in. Uk) Posted Date: August 27, 2018 at 17:31 
Very nice comments athavan. Keep up your good work.also like the comments about the inthira Vizha.

RAJKUMAR PERIYATHAMBY (canada) Posted Date: August 26, 2018 at 20:47 
உண்மைதான் கெளரவிக்கபடவேண்டியவர்கள் பணம் படைத்தவர்களோ பதவியில் இருப்பவர்களோ வயதில் மூத்தவர்களோ அல்ல எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருப்பவர்களும் தூரநோக்கத்துடன் செயலார்ருபவர்களும் தமிழ்மொழியையும் தமிழர் கலாச்சாரத்தை பாதுகாப்பவர்கள் ஊரின் ஒற்றுமைக்கு உழைப்பவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் வயது வேறுபாடு இன்றி கெளரவிக்கபடவேண்டியவர்களே ;


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
ஆதவன் பக்கம் (22 ) – 'பழனியப்பா' எனும் மகத்தான மனிதர்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2020 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (32) - Hats off ஜெயா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (31) – வல்வையில் துறைமுகத்துக்கான சாத்தியங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (30) – யாழிலும் யூனிவேர்சல் பழங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (29) – ஊரில் பணப்புழக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (28) - அக்கௌன்டன்ட் குமாராசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (27) – உண்மைச் சம்பவம் - ஐயாவும், ஆஞ்சநேயர் சாமியாரும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (26) – கண்டன் ஆச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (25) – யாழ்ப்பாணத்தாரின் ஒழுங்கைகளும் சுவர்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (24) – கப்பல் வாங்கிய நம்மவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (23 ) – யாழ்ப்பாணக் குப்பைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (21) – சுமந்திரனுக்கு வல்வையில் மாலை, 'Shame' மா?
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (20) – கஸ்புஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (19) – மதுராவும் வல்வையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (18) – இந்திரவிழாவில் நான் கண்ட 17 குறைபாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (17) – பாணாக்கம், மோர், தயிர்ச்சோறு, சர்பத்..........
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (16) – ஒரு முதுசத்தின் மறைவு (காணொளி இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (15) – கப்பல் மாப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (14 ) – வல்வை வரைபடத்தில் முதலாவதாக ரேவடிப் பூங்கா
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (13) – நான் ஒரு மரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (12 ) – இங்கு ஆங்கிலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (11) – கொட்டப்பட்ட இ வேஸ்ற்றுக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (10) – இசை நிகழ்ச்சியால் வல்வையில் மழுங்கடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்று
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2018 (வெள்ளிக்கிழமை)
ஆதவன் பக்கம் (9 ) – பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (8) – தடுமாறும் தமிழர் தமிழ் பெயர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (7) – வேதா ரீச்சரும் மதுரா அக்காவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (6) உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள், 3 வருடங்கள் முன்பு நான் விரும்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (5 ) – மயிலிட்டி என்னும் சோகம், நேரடிப்பாதை வல்வைக்கு வளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (4 ) – நகரபிதாவிற்கு………………….பொது மக்கள் சார்பில் 101 கோரிக்கைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (3) - M.K.சிவாஜிலிங்கம் - நான் அறிந்த ஊரின் சேவகன் -
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (2) – அரிப்பும், அழிப்பும்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (1) – ஐயா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2018 (வெள்ளிக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
தியாகங்களின் பெறுமதி?
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வைக்கு கடற் தொழில் அமைச்சர் விஜயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் மக்களின் பார்வைக்கு.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
கரைக்குள் அடித்து வரப்பட்ட படகு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
மீன் படகுகள் சேதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
கடும் மழைக்கு மத்தியில் தாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் (படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
Maaveerar Naal (Great heroes day) observed amid flooding
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
மழை வெள்ளத்துக்கு மத்தியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
இலங்கையை ஒட்டி செல்லும் புயல், Fengal எனப் பெயர்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
சண்முகம் அகால மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
கனமழை காரணமாக உடுப்பிட்டியில் வீட்டுக்குள் முதலை
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
இறைவனுக்கும் மேல் என்போம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
நாளைய மாவீர நாளுக்கு தயாராகும் தீருவில்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
மழைக்கு மத்தியில் பிரபாகரனின் 70 வது பிறந்ததினம் கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தீவிரமடையும் தாழ்முக்கம், புயலாக மாற வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தீவிரமடையும் தாழமுக்கம், மேலும் அதிக மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2024 (திங்கட்கிழமை)
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கு மக்கள் நினைவுகூரலாம் - அமைச்சர் ஆனந்த விஜேபால!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2024 (சனிக்கிழமை)
நல்லுரில் மாவீரர் நினைவாலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2024 (சனிக்கிழமை)
சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2024 (வெள்ளிக்கிழமை)
தீருவில் பொது பூங்காவில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம், அதிக மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2024 (புதன்கிழமை)
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2024 (திங்கட்கிழமை)
வியாபார கொமிஷனுக்கு பலத்த அடி!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
நாகை - காங்கேசன்துறை சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இரத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Feb - 2025>>>
SunMonTueWedThuFriSat
      
1
2345678
9
10
11
12
13
1415
16
171819202122
2324
25
26
27
28 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai