வடக்கில் இன்று இரவு கடும் மழைக்கு வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/01/2017 (வியாழக்கிழமை)
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் (Atmospheric disturbance) காரணமாக நாட்டின் வடக்கு உட்பட பல மாகாணங்களில் மழை இன்னும் அதிகமாகப்பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பெய்யக்கூடும் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று பெய்த மழை காரணமாக வல்வையில் சுமார் 20 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.