வல்வை ரேவடியில் நடைபெற்று வரும் “Beach Volleyball”( படங்கள் மற்றும் காணொளிகள் இணைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2014 (வெள்ளிக்கிழமை)
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் சுமார் 07.30 மணியளவில் ஆரம்பமான “Beach Volleyball” சுற்றுப்போட்டிகள் தற்பொழுது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இவ் விளையாட்டு நிகழ்விற்கு வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.M.K சிவாஜிலிங்கம் அவர்களும், திரு.சதிஸ் (வல்வை நகரசபை உபதலைவர்), திருமதி கிரிஜா வாசுதேவன் (வல்வை நகரசபை செயலாளர்), திரு. தவநேசன் (வல்வை கிராம சேவையாளர்), வல்வெட்டித்துறை இராணுவ முகாம் அதிகாரி, திருமதி சேதுலிங்கம் (அதிபர் -வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), திரு.M. R மோகனதாஸ் (யாழ் மாவட்ட விளையாட்டு அதிகாரி), திரு.குணானந்தன் (மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி) ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இவ் விளையாட்டு நிகழ்வானது மங்கள விளக்கேற்றல் மற்றும் கொடியேற்றல் வைபவத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து வீரர், வீராங்கனைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வுடன் "Beach Volleyball" சுற்றுப் போட்டி ஆரம்பமானது.
பெண்களுக்கான "Beach Volleyball" சுற்றுப் போட்டிக்கு மன்னார் மாவட்டம், வவுனியா மாவட்டம், முல்லைத் தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் மற்றும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ற்கு மேற்ப்பட்ட வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தார்கள்.
ஆண்களுக்கான "Beach Volleyball" சுற்றுப் போட்டிக்கு மன்னார் மாவட்டம், வவுனியா மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் மற்றும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மேற்ப்பட்ட வீரர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
பெண்களுக்கான முதலாவது "Beach Volleyball" போட்டியில் மன்னார் மாவட்டத்தை எதிர்த்து வவுனியா மாவட்டம் மோதியது. இப்போட்டியில் வவுனியா மாவட்டம் வெற்றி பெற்றுள்ளது.
பெண்களுக்கான இரண்டாவது "Beach Volleyball" போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தை எதிர்த்து யாழ் மாவட்டம் மோதியது. இப்போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் வெற்றி பெற்றுள்ளது.
பெண்களுக்கான மூன்றாவது "Beach Volleyball" போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தை எதிர்த்து வவுனியா மாவட்டம் மோதியது. இப்போட்டியில் வவுனியா மாவட்டம் வெற்றி பெற்றுள்ளது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் வவுனியா மாவட்டத்தை எதிர்த்து கிளிநொச்சி மாவட்டம் மோதவுள்ளது.
ஆண்களுக்கான முதலாவது ஆட்டத்தில் யாழ் மாவட்டத்தை எதிர்த்து வவுனியா மாவட்டம் மோதியது.இந்த ஆட்டத்தில் யாழ் மாவட்டம் வெற்றி பெற்றுள்ளது.
ஆண்களுக்கான இரண்டாவது ஆட்டத்தில் மன்னார் மாவட்டத்தை எதிர்த்து கிளிநொச்சி மாவட்டம் மோதியது.இந்த ஆட்டத்தில் மன்னார் மாவட்டம் வெற்றி பெற்றுள்ளது.
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் யாழ் மாவட்டத்தை எதிர்த்து மன்னார் மாவட்டம் மோதவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.