ஒன்ராறியோவுக்கான மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைக்கான சட்டமூலம் 104 ஐ உறுதிப்படுத்தியது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2024 (சனிக்கிழமை)
ஒன்ராறியோவுக்கான மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைக்கான சட்டமூலம் - 104 ஐ , (Bill 104 -The Tamil Genocide Education Week Act) உறுதிப்படுத்தியது.
தமிழின அழிப்பு நடைபெற்றதென்பதை மறுப்பவர்களால் மேன்முறையீடு செய்யப்பட்டு முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்கான சவால் நிராகரிக்கப்பட்டதோடு, இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்புக் குறித்து ஒன்ராறியோவில் வாழ்வோர் தொடர்ந்தும் கல்வி கற்கவும் அதனைப் பற்றிக் கற்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது..
உலகில் இலங்கை தமிழர் படுகொலையை அடையாளப்படுத்தும் முதலாவது தீர்ர்பாக இது அமைவதாக கருதப்படுகின்றது.
எக்ஸ் தளத்தில் (Twitter, Scarborough-Rouge Park MPP விஜய் தணிகாசலம் தான் சமர்ப்பித்த இந்த சட்டமூலம் “a historic event for Tamil people in Ontario and across the world.” எனத் தெரிவித்துள்ளார்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.