கொழும்பு கப்பல் கட்டுமான நிறுவனத்தில் Colombo Dockyard PLC (CDPLC) இலங்கைத் தயாரிப்பில் முதலாவது Electric Hybrid இல் Eco Bulk carrier வகை சரக்குக் கப்பல் கட்டப்பட்டுள்ளது. நோர்வேயின் Bergen இல் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் கப்பலுக்கு Misje Vita எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது 89.95 மீட்டர் நீளமும் சரக்கு கொள்ளளவு 5000 Deadweight tonnage கொண்டமைந்ததாகும். இக்கப்பல் bulk cargo, grain, timber, unit loads, மற்றும் container களை காவவல்லதாகும்.
Built-in Sri Lanka என்ற நாமத்தில் கட்டப்படுள்ள இக்கப்பலை இயக்க தேவையான சக்தி Four-stroke diesel engine களும் இவற்றுக்கு துணையாக Electric hybrid system மும் வழங்குகின்றன. தற்பொழுது வர்த்தக்கத்தில் ஈடுபட்டுவரும் Conventional bulk carrier களுடன் ஒப்பிடும் போது, இக்கப்பல் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு மிகவும் ஏற்றவை (Eco friendly ship) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேகுறித்த மொத்தம் ஆறு Electric hybrid வகை கப்பல்கள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.