கனடா ரொரன்ரோ புளுஸ் வாழ்வாதார உதவி தாண்டிக்குளத்தில் வழங்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/01/2017 (திங்கட்கிழமை)
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் பசுமாடு வழங்கும் நிகழ்வு இன்று திங்கள் 09.01.2017 அன்று தாண்டிக்குளத்தில் நடைபெற்றது.
போரினால் பாதிக்கப்பட்டு தற்போது தாண்டிக்குளம் பகுதியில் வாழ்ந்துவரும் பிரதீபன் சிந்துசா தம்பதியர்க்கு இந்த உதவி வழங்கப்பட்டது.
ரியூப்தமிழ் இளைஞர்கள் வவுனியாவில் இரண்டு நாட்களாக தங்கியிருந்து இக்காரியத்தை நிறைவேற்றினார்கள், சுமார் ஒரு வாரம் தொடர்ந்து பணியாற்றியே காரியத்தை முடிக்கமுடிந்தது.
மாடுகளை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவது மிகவும் கடுமையான பணியாக இருக்கிறது, பசுமாடு வைத்திருந்தவரின் சரியான ஆதாரப்படிவங்கள் கிராமசேவையாளரால் உறுதி செய்யப்பட வேண்டும், மிருக வைத்தியரால் உரிய தடுப்பூசிகள் போடப்பட்டிருக்க வேண்டும், மிருக வதை இல்லாமல் மகிழ்வாக அவைகளை கொண்டு செல்லப்பட வேண்டும், இப்படி பல பரிசோதனைகளைத் தாண்ட வேண்டும்.
குறித்த பணியை நிறைவேற்றினார் கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம், இவர் வடமராட்சி ரியூப்தமிழ் பிரிவின் பொறுப்பாளராக இருக்கிறார்.
ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் தற்போது வவுனியாவில் வேண்டியுள்ள ஐந்து ஏக்கர் காணியில் முக்கியமான தொழில் முயற்சிகள் ஆரம்பிக்கவுள்ளன, ஒட்டிசுட்டானிலும் காணி ஒன்று வேண்டப்பட்டுள்ளது.
தற்போது யாழ். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் குழுவினரும் கனடாவில் நிற்கிறார்கள், இவர்களுடன் நேற்று சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் பணிகள் தொடர்பான பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
இன்று முதலமைச்சரின் நிர்வாகக்குழுவுடன் பேச்சுக்கள் நடக்கின்றன, வடமாகாணசபை ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனுடைய பணிகளுக்கு ஆதரவளிக்கும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக கனடாவிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.