கனடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் காடுகளை பாதுகாக்க ரூபா 76 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கி உலகின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். உலக பணக்கார பட்டியலில் 13வது இடத்தில் இருப்பவரும், கனடாவின் பிரபல தொழிலதிபருமான சிப் வில்சன், லுலுலேமன் அத்லெட்டிகா என்ற நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார்.
வன நிலங்களின் அவசியம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, எதிர்கால சந்ததியினர் பற்றி ஆழ்ந்து சிந்தித்த இவர் தனது சொத்தில் 76 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
தான் அளித்த நன்கொடை பற்றி கருத்து தெரிவித்த அவர் "வான நிலங்களைப் பாதுகாப்பது என்பது அனைவரது கடமை. அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் உதவி. இதற்காக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி. நன்கொடை காரணமாக வன நிலங்கள் பூங்காக்களாக மாறு என நம்பிக்கை தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.