மாகாண ரீதியிலான சிறார்கள் தொடர்பான தரவாய்வு இன்று வல்வை விக்னேஸ்வரா பாலர்பாடசாலையில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2014 (திங்கட்கிழமை)
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஆறுதல் நிறுவனம் வடமாகாண சபையின் அனுசரணையுடனும் UNICEF நிறுவனத்தின் அனுசரணையுடனும் வடமாகாண ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 முன்பள்ளிகளில் முன்பள்ளி சிறார்கள் தொடர்பிலான தரவாய்வு மற்றும் பெற்றோருடடான கலந்துரையாடல் நிகழ்வினை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தவகையில் வடமராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்பள்ளிகளான வல்வை விக்னேஸ்வரா பாலர்பாடசாலை மற்றும் உடுப்பிட்டி விநாயகர் பாலர் பாடசாலையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்பள்ளி சிறார்கள் தொடர்பான தரவுகள் திரட்டப்பட்டதோடு பெற்றோருடன் பிள்ளைகள் தொடர்பில் கலந்துரையாடயும் மேற்கொள்ளப்பட்டது.
இளம்பிள்ளைப் பராய அரவணைப்பு மற்றும் விருத்தி நிலையங்களின் தற்போதைய நிலமை பற்றிய பண்பியல் ரீதியிலான ஆய்வும் அடிப்படைத் தகவல் திரட்டுதலும் (Qualitative Assessment of early Childhood care and Development centres) என்னும் கருப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது
இக் கலந்துரையாடல் நிகழ்வில் அயல் பாடசாலைகளின் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தரவாய்வு எதிர்வரும் டிசம்பர் வரை வடமாகாணத்தின் யாழ்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய 5 மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.