பேய்க்கப்பலாக மாறியுள்ள Sea Princes பயணிகள் கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2017 (வெள்ளிக்கிழமை)
அதி நவீன சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று கடற் கொள்ளையரின் தாக்குதலில் இருந்து தப்பிபதற்காக 10 நாட்களுக்கு பயணிகள் மின்குமிழ்கள் பாவிப்பதற்கு தடை ஏற்படுத்தப் பட்டுள்ளதுடன், கப்பலின் வெளிதட்டுகளில் அமைந்துள்ள வசதிகளை (Deck parties, outdoor bars and movies) பாவிப்பதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
104 நாட்கள் உலகத்தைச் சுற்றும் சுற்றுலா ஒன்றில் 1900 பயணிகளுடன் புறப்பட்டுள்ள Sea Princes எனப்படும் அதி நவீன சொகுசு பயணிகள் கப்பலிலேயே இந்தச் சம்பவம் இடம்பெறுகின்றது.
அத்துடன் கப்பலில் உள்ள பயணிகளுக்கு கடற் கொள்ளையர் கப்பலை தாக்க வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற பயிற்சியும் (Piracy drill) வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் சிட்னியிலிருந்து இந்திய சமுத்திரம், அராபிக் கடல் வழியாக் துபாய் சென்று பின்னர் சுயஸ் கால்வாய் வழி ஐரோப்பா செல்லவுள்ளது.
சோமலிய கடற் கொள்ளை சம்பவம் இடம்பெறும் கடற்பிரதேசம் ஊடாக தற்பொழுது பல வர்த்தகக் கப்பல்கள் பயணித்து வருவதுடன், குறித்த கப்பல்களும் இவ்வாறான முன்னேற்பாடுகள் பலவற்றை எடுத்து வருகின்ற போதும், மேற்குறித்த பயணிகள் கப்பலில் நூற்றுக் கணக்கான பயணிகள், அதிலும் குறிப்பாக மேலத் தேயவர்கள் பலர் உள்ளதால், குறித்த விடயம் பல பிரபல ஊடகங்களில் தற்பொழுது மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
கீழே தற்பொழுது பயணத்தில் ஈடுபட்டுள்ள அதி நவீன சொகுசு பயணிகள் கப்பல் Sea Princes இன் சில காட்சிகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.