CWN கணிதப்போட்டி- 2014 பரிசளிப்பு இன்று நடைபெற்றது (முழுப் படத் தொகுப்பும் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறையில் சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினால் (Chithambara Well wishers Network - CWN) நடத்தப்பட்டிருந்த கணிதப்போட்டி - 2014 (Maths Challenge Exam - 2014) பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று புதிதாகக் கட்டப்பட்டுள்ள வல்வை சனசமூகசேவா நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
சிதம்பரா பழைய மாணவர் சங்க அனுசரணையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு பிற்பகல் சுமார் 4 மணியளவில் ஆரம்பித்திருந்தது. நிகழ்விற்கு வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் திரு.சி.நந்தகுமார் பிரதம விருந்தினராக வருகைதந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் வல்வை முத்துமாரியம்மன் பிரதம குருக்கள் தண்டாயுதபாணிகதேசிகர், வல்வை சிவன் கோவில் பிரதம குருக்கள் மனோகர குருக்கள், வடமாகணசபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம், வல்வை நகரசபைத் தலைவர் திரு.ந.அனந்தராஜ், வல்வை நகரசபை உப தலைவர் திரு.க.சதீஸ், வல்வை சிதம்பராக் கல்லூரி அதிபர் திரு.கி.இராஜதுரை, வல்வை மகளீர் மகா வித்தியாசாலை அதிபர் செல்வி சுப்பிரமணியக் குருக்கள், வல்வை சிவகுரு வித்யாசாலை ஆசிரியை திருமதி.புஸ்பகலா, வல்வை ஊறணி வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி திருமதி.கலைச்செல்வி, வல்வை ஆவணக்காப்பாளர் திரு.மீனாட்சி சுந்தரம், முன்னாள் வல்வை விளையாட்டுக்கழக தலைவர் மு.தங்கவேல், வல்வை பொலிஸ் நிலைய அதிகாரி, வல்வை இராணுவ முகாம் அதிகாரி, வல்வை நகரசபை உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வல்வை சனசமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டிருந்தனர்.
பதக்கங்கள் வழங்கி கெளரவிப்பு
குறித்த கணிதப் போட்டி தரம் 5 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கே நடாத்தப்பட்டிருந்தது. 2 தரத்திலும் முதல் 3 நிலையைப் பெற்ற மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.
மேலும் போட்டியில் பங்குபற்றியிருந்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.
புலமை பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் கெளரவிக்கப் பட்டனர்
மேலும் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், வல்வை சிதம்பராக் கல்லூரியில் கடந்த வருடம் க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) ஆகிய பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களும் இன்றைய நிகழ்வில் கெளரவிற்கப்பட்டிருந்தனர்.
லண்டனில் நடாத்தியதைப்போல் இங்கு வல்வெட்டித்துறையிலும் சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினால் (Chithambara Well wishers Network - CWN) கணிதப்போட்டி பரீட்சை (Maths Challenge Exam) கடந்த 14.06.2014 அன்று சிதம்பராக் கல்லூரி மற்றும் சிவகுரு வித்தியாசாலையில் நடாத்தப்பட்டிருந்தது.
வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
SA.PE.RAJKUMAR (CANADA)
Posted Date: November 07, 2014 at 11:08
nalla seithy anaivarukkum vazhththukkal
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.