டெங்கு நுளம்புகளின் பெருக்கத்கத்திற்கான இடம் மாறியுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2017 (வியாழக்கிழமை)
டெங்கு நுளம்புகள் தமது பெருக்கத்தை அதிகரிப்பதற்கான இடங்களை மாற்றியிருப்பதாக பூச்சியியல் ஆய்வுப்பிரிவின் புதிய தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது.
தற்பொழுது நுளம்பின் பெருக்கம் வீட்டின் உட்பகுதியில் இடம்பெறுவதாக நுண்ணுயிரியல் சங்கத்தின் தலைவர் நயித் சுமனசேன தெரிவித்தார்.
வீடுகளின் உட்பகுதியில் அதாவது சிறிய அளவில் தண்ணீர் உள்ள கொள்கலன்கள், குளிர்சாதனப்பெட்டிகள், செல்லப்பிராணிகள் குடிக்கும் தண்ணீர் கொள்கலன்கள் ஆகியவற்றில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உணவுகள் மூலம் டெங்கு நுளம்பின் பெருக்கம் இலகுவாக இடம்பெறுகின்றது. தற்பொழுது தனது இனப்பெருக்கத்திற்காக வீடுகளையும் கொள்கலன்களையும் தெரிவு செய்துள்ளது.
தற்போதைய டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்கு காரணம் அதிகரித்துள்ள கட்டட நிர்மாணப்பணிகளும் முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.
டெங்கு நுளம்பின் அடர்த்தி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசிற்றமோல் குளிசையை மாத்திரமே எடுக்க வேணடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (news.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.