உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் சிறப்பு காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 17.30 மணிக்கு பாரீசில் காண்பிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு பிரான்ஸ் வல்வை நலன்புரிச்சங்கம் முக்கிய ஆதரவை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வல்வை மக்களின் சார்பில் திரைப்படத்தின் ஆரம்ப உரை இடம் பெறவுள்ளதுடன், மேலும் பிரான்சின் முக்கிய கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.
அத்தோடு டென்மார்க்கில் இருந்து வல்வைக் கலைஞர்கள் பலர் பாரீஸ் சென்று வல்வை மக்களை சந்தித்து கலைப்பயணத்தின் உணர்வுகளை பாரிமாற இருக்கிறார்கள்.
குறித்த சிறப்பு காட்சிக்கான நுழைவூச் சீட்டுக்கள் தற்பொழுது பாரீஸில் விற்கப்பட்டு வருவதாகவும், பிரான்ஸ்சில் இருக்கும் வல்வை மக்களுக்கு குறுஞ்செய்திகள் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிர்கப்படுகின்றது.
திரைப்படம் திரையிடப்படவுள்ள இடம் பின்வருமாறு,
Publicis Cinémas, 133 Avenue des Champs-Élysées, 75008 Paris, Métro : George V / RER A : Charles de Gaulle - Étoile To purchase your tickets contact 0635307671
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.