வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம், 48 மணி நேரத்தில் புயலாக மாறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2016 (புதன்கிழமை)
வங்காள விரிகுடாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உருவான தாழமுக்கம் (Low Pressure) தற்பொழுது வலுப்பெற்று தீவிர தாழமுக்கம் (Depression) ஆக மாறி மணிக்கு 5 கடல் மைல்கள் வேகத்தில் நகர்ந்து வருகின்றது.
இன்று இலங்கை நேரம் காலை 0530 மணிக்கு Latitude 9.8ºN and Longitude 90.5ºE என்னும் புள்ளியில் (திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 750 கடல் மைல்கள் தொலைவில்) நிலை கொண்டிருந்த தீவிர தாழமுக்கம் எதிர்வரும் 24 மணி நேரத்தில் அதி தீவிர தாழமுக்கம் (Deep Depression) ஆக மாறி பின்னர் அதற்கடுத்த 24 மணி நேரத்தில் அனேகமாக புயலாக (Cyclonic storm) மாறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரமும் இதே பகுதியில் தாழமுக்கம் ஒன்று நடா (Nada) என்னும் புயலாக மாறியிருந்தது.
தற்பொழுது நகர்ந்து வரும் தாழமுக்கத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
இதேவேளை வடமராட்சிப் பகுதியில் நேற்றைய தினம் மீனவர்களை தொழிலுக்கு செல்லவேண்டாமென தடுக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர் என யாழ் தினசரிப்பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேற்குறித்த தாழமுக்கம் பற்றி, தாழமுக்கம் உருவாகியிருந்த தினத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனுடன் தொடர்பு பட்ட எமது முன்னைய செய்தி
வங்காள விரிகுடாயொட்டி சுமத்திரா பகுதியில் தாழமுக்கம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.