690 மீட்டர் நீள பருத்தித்துறை பாரிய மீன் பிடித்துறைமுகம் பற்றிய தரவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2017 (திங்கட்கிழமை)
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian development bank) நிதி ஒதுக்கீட்டுடன் 700 கோடி ரூபா செலவில் பருத்தித்துறையில் பாரிய மீன் பிடித் துறை முகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. துறைமுகத்தின் கடற்பக்க நீளம் 689.2 மீட்டர்கள் ஆகும்.
விரைவில் அமைக்கப்டவுள்ள துறைமுகம் தொடர்பாக ஆராய ஆசிய அபிவிருத்தி வங்கி, பருத்தித்துறை பிரதேச செயலைக் அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற் தொழில் அமைச்சு அதிகாரிகள் கொண்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை குறித்த பகுதிக்கு விஜயம் செய்து ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.
யாழில் அமையவுள்ள மிகப் பெரிய அபிவிருத்திப் பணிகளில் இது அமையவுள்ளதுடன் பொருளாதார மற்றும் வேலை வாய்ப்புக்கள் வளர்ச்சியில் இது முக்கிய இடம்பிடிக்கவுள்ளது.
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் தொடர்பான பிரதான தரவுகள்
துறைமுக ஆழம் (Harbour basin depth) - 5 மீட்டர் (இந்த ஆழம் மிகச் சிறிய கப்பல்களுக்கும் போதுமானது)
நீளம் (கடற்பக்க வடக்கு அணை) - 689.2 மீட்டர்
அகலம் (கிழக்க பக்க அணை) - 140.4 மீட்டர்
நுழைவு வாயில் அகலம் – 76 மீட்டர்
நீர்த் தடுப்பு அணை (Break water) - 135.9 மீட்டர்
பின்வரும் வசதிகளை புதிய துறைமுக கொள்ளவுள்ளது
வள்ளங்களை உயர்த்தும் வசதி (Boat lifting)
திருத்தம் வசதி (Mechanical repair work shop)
எண்ணை அகற்றும் வசதி (Fuel dispensing unit)
மின் பிறப்பாக்கி இயந்திரம் (Generator)
நீர்த்தாங்கி (Water tank)
எண்ணை தாங்கி (Fuel storage)
ஏலம் விடும் மண்டபம் (Auction hall)
நிறுக்கும் இயந்திரப் பகுதி (Weigh Bridge)
பாதுகாப்பு ஊழியர் அறை (Security office)
பொது நோக்கு மண்டபம் (Community hall)
உணவு விடுதிச்சாலை (Canteen)
வலைப் பொத்தும் மண்டபம் (Net mending hall)
மலசல கூடம் (Toilet)
நிர்வாக அலுவலகம் (Administrative building)
களஞ்சியப் பகுதி (Stores)
தங்குமிடம் (Accommodation)
ஐஸ் தயாரிக்கும் இயந்திரம் (Ice plant)
குளிர்சாதன வசதி (Cold storage)
வாகன தரிப்பிடம் (Parking area)
மீன்களை இறக்கும் பகுதி (Off loading building)
ஏலம் விடும் பகுதி (2 ஆவது) (Auction hall, For deep sea boats)
எண்ணை வசதி (Fuel Bunkering)
நீர் வசதி (Water bunkering)
பருத்தித்துறை துறைமுகமும் இறங்குதுறை தொடர்பாக எமது இணையதளத்தில் 03/02/2014 அன்று பிரசுரிக்கப்பட்டிருந்த ஆய்வுக் கட்டுரை.
வடபகுதியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பருத்தித்துறை துறைமுகமும் இறங்குதுறையும் – ஒரு ஆய்வுக் கட்டுரை - கப்டன் அ.ஆதவன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.