300 மில்லியன் செலவில் தொண்டைமானாறு தடுப்பணை புனரமைப்பு, புதிய பாலமும் அமையவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2017 (வெள்ளிக்கிழமை)
உலகவங்கியின் நிதியுதவியுடன் தொண்டைமானாறு தடுப்பணை புனரமைக்கும் பணிகள் தற்பொழுது துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. புனரமைக்கும் பணிகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தியாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடல் நீர் உள் வருவதை தடுக்கவும், மழை நீரைச் சேகரிக்கவும், 1953 ஆம் ஆண்டு நீரேரிக்கு குறுக்காக குறுக்கு அணையுடன் கூடிய வான் கதவுகள் அமைக்கப்பட்டன.
தற்பொழது பழைய கதவுகள் அனைத்தும் துருப்பிடித்துள்ளதுடன் நீரின் கசிவும் இடம்பெறுவதனையடுத்து குறித்த நன்னீர் திட்ட கதவுகளை மீள் கட்டுமானம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் 1953 ஆம் ஆண்டு பொருத்தப்பட்ட இரும்பிலான கதவுகள் அகற்றப்பட்டு, துருப்பிடிக்காத வெள்ளிரும்பிலான (Stainless steel) கதவுகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
புனரமைப்பு பணிகளுக்கு எதுவாக தடுப்பு அணையின் 2 பக்கங்களும் பாரியளவு மண் மூடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நேரடி திட்டத்தின் கீழ் உலக வங்கி ரூபா 300 மில்லியனை வழங்கியுள்ளது. இப்புதிய அணைக்கட்டுடன் இணைந்து பாலம் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
கடந்த பல வருடங்களாக செல்வச் சந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் போது நீரேரிக்கு குறுக்காக மண் அணையிலான தற்காலிக பாலம் பக்தர்களின் பாவனைக்காக அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.