நாளை மங்களசமரவீர யாழ் விஜயம், ஆனந்தன் நீச்சல்தடாக ஆரம்பபணிகள்பற்றி ஆராய்வார்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/01/2017 (புதன்கிழமை)
இலங்கை வெளி விவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நாளை 26.01.17 அன்று யாழ்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார் எனத் தெரியவருகின்றது. யாழ் வரும் அமைச்சர் நாளை காலை 11 மணியளவில் யாழ் அரச அதிபர் பணிமனையில், வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கின்னஸ் புகழ் வீர்ர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாக வேலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்வர் எனவும் தெரியவருகின்றது.
வல்வெட்டித்துறையில் இரண்டரைக் கோடி ரூபா செலவில் நீச்சல் தடாகம் அமைப்பதற்கு கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.