நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் நேற்றைய தினம் 13 ஆம் திருவிழா இடம்பெற்றது. நேற்றைய பகல் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த இரண்டு போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவாமி வீதியுலாவின் போது தீவட்டி, மற்றும் தீப்பந்தம் காவி வந்திருந்தனர்.
வல்வையில் அதிக சமயக் கட்டுப்பாடுகள் கொண்ட வல்வெட்டித்துறை சிவன் கோயிலில். ஆலய உற்சவங்களின் போது உள் மற்றும் வெளி வீதிகளில் ஆண்களுத்க்கு வேட்டி உடை அவசியம் என்பதால் குறித்த போலந்து நாட்டவர்களும் வேட்டி மற்றும் சால்வை அணிந்திருந்தனர்.
எமது கோயில்களில் உள்ள புதுமைகளை அறிவிதில் ஆர்வம் காட்டிய இவர்கள், தொடந்து இடம்பெறவுள்ள சப்பரம் மற்றும் தேர் திருவிழாக்களிலும் கலந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.