1 மில்லியன் செலவில் வல்வை மூத்த பிரஜைகள் சங்க கட்டடம், இன்று அடிக்கல் நாட்டப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2017 (புதன்கிழமை)
வல்வை வடமத்தி கிராம சேவையாளர் பிரிவில் இயங்கிவரும் (J389) மூத்த பிரஜைகள் சங்கத்துக்கு என (Valvai Senior Citizen Association) "மூத்த பிரைஜைகள் ஓய்வு நிலையம்" ஒன்று ரூபா 1 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை 1030 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த ஓய்வு நிலையம் வல்வை சிவகுரு வித்தியாசாலை ஒழுங்கையில், பாடசாலையிலிருந்து சுமார் 25 மீட்டர் தொலைவில் அமைகின்றது. கட்டத்திற்கான நிதியுதவியை வடமாகாண சமூக சேவைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.
இன்றைய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் திரு .வ.செல்வம் (மாவட்ட உத்தியோகத்தர், சமூக சேவைகள் திணைக்களம், யாழ்பாணம்), திரு.பா.முகுந்தன் (உதவிப் பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களம், யாழ்பாணம், வட மாகாணம்), திரு.ப.சர்மிலன் (சமூக சேவைகள் உத்தியோகத்தர், பிரதேச செயலகம், பருத்தித்துறை), திருமதி.ம.கீதா தொழில் நுட்ப உத்தியோகத்தர், பிரதேச செயலகம், பருத்தித்துறை), திருமதி வி.சுபாசினி (பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் J/389), திருமதி ஜெ.ஜெயலட்சுமி (சமுர்த்தி உத்தியோகத்தர் J/389) ஆகியோருடன் வடமத்தி கிராம சேவையாளர் திரு.அருள் பஸ்தியான் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.