மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, மாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பைசா என்று அழைக்கப்படும் ரொட்வீலர் இன நாயானது கடந்த 20.08.2006 அன்று பிறந்துள்ளது.
இந்நிலையில் தனது 18 வயதை தாண்டிய பைசா நேற்றையதினம் (2024.09.14) உயிரிழந்தது.
இறுதிச் சடங்கினை செய்தவர் கடந்த 10 வருடங்களாக பைசாவினை வளர்த்து வந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக தனக்கு பாதுகாப்பினை வழங்கிய நன்றிக் கடனுக்காக மனிதர்களுக்கு செய்கின்ற இறுதிச் சடங்கு போல பைசாவுக்கும் இன்றையதினம் இறுதிச் சடங்கினை நடாத்தி நெகிழ வைத்துள்ளார்.
பான்ட் வாத்தியங்கள் முழங்க, பைசாவின் உடலம் வட்டுக்கோட்டை பகுதி எங்கும் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பின்னர் பைசாவின் எசமானின் காணியில் உடலமானது நல்லடக்கம் செய்யப்பட்டது. (பாபுஜி fb)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.