Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்

தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் முதலிடம்

பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2026 (வியாழக்கிழமை)
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்விச் சாதனைகள் மிகச் சிறந்த நிலையை எட்டியுள்ளன.
 
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் (பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்) 9,191 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களின் அடிப்படையில் 65.19 சதவீதமாகும். இதன் மூலம் மாகாணங்களுக்கிடையிலான தரவரிசையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் பெருமையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 
மேலும், உயிரியல் பிரிவு மற்றும் கலைப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதத்தில் தேசிய ரீதியில் முதலிடத்தையும், பௌதீக விஞ்ஞானம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதத்தில் தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தையும் வடக்கு மாகாணம் இம்முறை பெற்றுக்கொண்டுள்ளது.
 
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றவர்களின் வீதத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்த வடக்கு மாகாணம், இம்முறை தனது அடைவு மட்டத்தை மேலும் உயர்த்தி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேவேளை, பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
இதற்கு மேலதிகமாக, இம்முறை மாகாண ரீதியாக 534 மாணவர்கள் சகல பாடங்களிலும் அதிவிசேட சித்தியான 'ஏ' (3ஏ) பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். இது தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் 3.79 சதவீதமாகும். 
 
3ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் வீதத்தின் அடிப்படையிலான தரவரிசையிலும் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து மேலும் ஒரு சாதனையைத் தனதாக்கியுள்ளது.
 
 
பிரதி - வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
08.04.2026

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.



கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Aug - 1793>>>
SunMonTueWedThuFriSat
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தமிழ் பெயர்கள்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்