எங்கள் தாய் நிலம் என்றுமில்லாதவாறு அதிக வெப்பத்தினை பெற்றுள்ளது. இதுவரை காலமும் அனுபவிக்காத சூட்டினை வறட்சியினை எங்கள் நிலத்தில் வாழும் அனைத்து உயிர்களும் அனுபவித்து வருகின்றது. மழையும் பொய்த்து விட்டது.
இந்தியாவில் தமிழ்நாடடில் ஈரோடு மாவட்டத்தில் 115 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது யாழ்ப்பாணத்தில் 104 டிகிறி அல்லது 40 பாகை செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருப்பதும் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் செல்வதும் குளிரூட்டப்பட்ட பானங்களை அருந்துவதும் இதற்கு தீர்வாகாது. ஒரு நாளைக்கு பல தடவைகள் குளித்துக்கொண்டிருக்கின்றனர் பலர் - கிணற்றுக்குள் நீர் வற்றிப்போனால் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் என்ன செய்யப்போகின்றீர்கள் ..........
ஆம் நாங்கள் தற்போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றோம். 40 பாகை செல்சியசை தொட்ட வெப்பநிலை இனி குறையப்போவதில்லை. இன்னும் அதிகரிக்கத்தான் போகின்றது. கோடிகளில் கட்டப்பட்ட வீடுகளையும் கோவில்களையும் கட்டிடங்களையும் விட்டு தண்ணீருக்காக வேறு இடங்களை நாடி எங்களால் ஓடிவிட முடியாது. வயது முதிர்ந்தவர்களையும் பச்சிளம் குழந்தைகளையும் உடல் பலவீனமானவர்களையும் இழக்க முடியாது.
எனவே அன்பான இயற்கையை நேசிக்கும் சொந்தங்களே Greenlayer சுற்றுச்சூழல் அமைப்பாகிய நாங்கள் உங்களிடம் கெஞ்சுகின்றோம். ஆள் ஒருவர் 100 மரக்கன்றுகளை ஒருசில மாதங்களில் நடும் செயற்திட்டத்தில் இணைந்து கொள்க.
எமது வாழ்விற்காகவும் எமது இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் உங்கள் வீட்டில் அல்லது வளவில் அல்லது நீங்கள் பணிபுரியும் இடத்தில் தென்னையோ பலாவோ மாமரமோ நிழல் தரும் மரமோ எதுவாயினும் 100 மரக்கன்றுகளை இன்றில் இருந்து நடுவதற்கு தயாராகுங்கள். உங்களிற்கு பக்க பலமாக நாங்கள் வருகின்றோம்.
இந்த அவசரகாலத்திட்டத்திற்கு மனம் வைத்து இறங்குங்கள். உண்மையாக எங்கள் முயற்சியினை புரிந்து கொண்டு வருபவர்கள் தொடர்பு கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.