கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது.
இந்த விழாவிற்கு தலமை தாங்கியிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அடிக்கல் நாட்டும் வைபவத்தைத் தொடர்ந்து பேசுகையில் ஆனந்தன் அவர்கள் தனது ‘சித்தப்பா’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இனவாதத்தை தூண்டும் விதத்தில் செயற்படும் எவருக்கும் நாட்டின் உண்மையான பிரஜகள் துணை போக கூடாது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஆனந்தனின் மனைவி மனல் ஆனந்தன், அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு சிறிய தாய் உறவு முறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீச்சல் தடாகம் அமையும் இடம் இதுவரை இலங்கைச் சுங்கத்திற்கு சொந்தமாக இருந்து வந்தது. 40 ஆண்டுகள் முன்பு வரை இப்பகுதியில் இலங்கை சுங்க அலுவலகம் அமைந்திருந்ததுடன், பாரிய கிட்டங்கி (Ware house) ஒன்றும் அமைந்திருந்தது.
சுங்கத்திற்குச் சொந்தமான இந்த இடத்தை நீச்சல் தடாகம் அமைக்க வல்வை நகரசபைக்குச் சொந்தமாக மாற்றுவதற்கு மங்கள சமரவீரவின் உதவி நாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.