வடக்கில் மழை பெய்வதற்கான வாய்ப்பு - வளிமண்டவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2017 (சனிக்கிழமை)
கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலைக்கு இன்று நண்பகல் அதிக சாத்தியம் உள்ளது என்று இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் (Department of meteorology, Srilanka) எதிர்வு கூறியுள்ளது.
இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடியுடன் கூடிய மழை பிற்பகல் 2 மணிக்கு பின்னரும் நாளை காலையும் ஏற்படலாம் என மேலும் தெரிவித்துள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்நறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் 75 மில்லிமீற்றர்களை தாண்டிய மழைவீழ்ச்சி பதிவகலாம் என்றும் திணைக்களம ;தெரிவித்துள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.