நவராத்திரிவிழாவின் ஒன்பதாவது நாளின் நிறைவாக சகல இந்து ஆலயங்களிலயும் இன்று மகிஷாசுரவதம் அனுஸ்டிக்கப்பட்டது. வல்வையிலும் இன்று மகிசாசுரவத நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வையொட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அம்பாள் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அங்கு மகிசாசுரவதம் இடம்பெற்றிருந்தது.
ஒன்பது தினங்கள் நடைபெறும் நவராத்திரிவிழாவில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதனைத் தொடர்ந்து மறுநாள் தசமியில் தேவர்கள், மகிஷாசுரனுடனான வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடினார்கள் என்றும் இதனை 'விஜயதசமி' என்றும் வழங்கலாயிற்று என்றும் கூறப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.