Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று நிறைவெய்தியது. நாளை சப்பறத் திருவிழா நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து நாளை மறுதினம் தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது.
அமரர் வே .சோதிநாராயானசாமி (பரஞ்சோதியப்பா) மற்றும் சோ.சந்திரமோகன் அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட போட்டியின் ஆரம்ப போட்டிகள் இன்று காலை வல்வை தீருவில் மைதானத்தில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறைச் சேர்ந்த ஆறுமுகம் மதியழகன் என்னும் இளைஞர், மணற்காட்லிருந்து உந்துருளியில், வல்வெட்டித்துறை நோக்கி வருகையில் நேற்று முன்தினம், 15-08-13 அன்று மரணமடைந்துள்ளார். பிரேதபரிசோதனை மற்றும் போலீஸ் விசாரணைகளின் பிரகாரம் மரணம் மாரடைப்பால் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுவரும் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தொண்டைமானாறு விநாயகர் மின் அமைப்பினரால் முருகப்பெருமானின் மின் உருவம் ஒன்று உருவாக்கட்டுள்ளது. சுமார் 40 அடி உயரமான இவ் உருவம் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் நிறுவப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு வாயில் மற்றும் தங்க நீர்த்துறை ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. அண்மையில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த புதிய துறைமுகத்துக்கு (பகுதி), தற்பொழுது உலகத்தில் வாணிபத்தில் உள்ள பாரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான (CMA-CGM PEGASUS) வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் திருவிழா நேற்று நிறைவெய்தியது. வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
Florence க Robinson ex அன்னபூரணி எனும் வல்வையிலிருந்து அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்திருந்த பாய்மரக் கப்பலின் 75 ஆவது அகவை நினைவு கூறுமுகமாக பல்வேறு நிகழ்வுகள் பலரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் ஒரு நிகழ்வாக திரு.சீவரத்தினம் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள நூல் வெளியீடு நாளை (18-08-13) இடம்பெறவுள்ளது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் நாள் பகல் திருவிழா நிறைவெய்தியது. பக்தர்களின் நேர்த்திகளான காவடி, தூக்குக் காவடி, பாற் சொம்பு, கற்பூரச் சட்டி, பஜனை போன்றவை பக்தர்களால் அனுஸ்டிக்கப்பட்டு வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
யாழ்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா இன்று நடைபெற்றிருந்தது. இரவு மகோற்சவம் மாலை 06:00 மணியளவில் ஆரம்பித்து இரவு 09:00 மணியளவில் நிறைவெய்தியது.
யாழ்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா இன்று நடைபெற்றிருந்தது. இன்று முற்பகல் சுமார் 09:00 மணியளவில் ஆரம்பமாகியிருந்த மகோற்சவம் சுமர்ர் 13:30 மணிவரை நீடித்திருந்தது.
செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அருகில் அமைந்திருக்கும் மடை வாயிலுக்கு (Sluice gate) சமாந்தரமாக இவை இரண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வலிகாமத்திலிருந்து வரும் பக்தர்கள் சுமார் 2 1/2 Km தூரத்தினை மீதப்படுத்தக் கூடியதாகவுள்ளது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் திருவிழா நிறைவெய்தியது. மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நாளை நடைபெறவுள்ளது. பூஜைகள் முற்பகல் 09:00 மணியளவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுவரும் மகோற்சவத்தினை தொடர்ந்து பக்தர்களின் நேர்த்திகளான காவடி, தூக்குக் காவடி, பாற் சொம்பு, கற்பூரச் சட்டி, பஜனை போன்றவை பக்தர்களால் அனுஸ்டிக்கப் பட்டு வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. இனிவரும் அடுத்த நாட்களில் இவை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் பகல் திருவிழா இன்று காலை நடைபெற்றது. படங்களில் இன்று காலை இடம்பெற்ற 9 ஆம் திருவிழா நிகழ்வுகளையும் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் வழக்கத்தில் இருந்து வரும் பூக்காரர் மற்றும் அவர்களின் பணிகளையும் காணலாம்.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் திருவிழா இன்று நடைபெற்றது. மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் மிகவும் புகழ் பூத்த தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. படங்களில் இன்று மாலை இடம்பெற்ற 7 ஆம் திருவிழாவின் இரவு நிகழ்வுகளைக் காணலாம்.
விருந்தினர்கள் உரையினைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் கெளரவிக்கப்பட்டவர்கள் விபரம் பின்வருமாறு,
திரு. கனகசாபாவதிப்பிள்ளை (கவிஞர்)
திரு. மு . தங்கவேல் (முன்னாள் வல்வை வி.க தலைவர்)
திரு. க .தேவசிகாமணி (மூத்த விளையாட்டுவீரர், வல்வை உதயசூரியன் கழக மூத்த உறுப்பினர்)
இலங்கையில் மிகவும் புகழ் பூத்த முருகன் ஆலயமான செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. படங்களில் இன்று காலை இடம்பெற்ற 7 ஆம் திருவிழா நிகழ்வுகளையும் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் மட்டும் நிகழும் சிறுமிகள் விளக்கு எடுக்கும் நிகழ்வினையும் காணலாம்.
வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது நிறைவையொட்டி, அவ்விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டு வந்த மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் ஒரு நிகழ்வாக வினோத உடைப் போட்டிகள் நேற்று முற்பகல் நடை பெற்றிருந்தது. கண்களைக் கவர்ந்து....
வல்வெட்டித்துறை உதயசூரியன் கழகத்தின் 50 ஆவது நிறைவையொட்டி, அவ்விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் காலை போட்டிகள் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவுபெற்றன.
எதிலும் ஒரு மாற்றத்தைக் காட்டும் ஒப்பீட்டளவில் சிறிய நிலப்பரப்பைக் கொண்ட வல்வை நகரில், பல விளையாட்டுக்கழகங்கள் உள்ளது குறிபிப்டத்தக்கது. இவற்றில் உதயசூரியன் விளையாட்டுக்கழகதம் கடந்த வருடம் 50 ஆவது வருடத்தைப் பூர்த்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று பிற்பகல் சுமார் 4.00 மணி மணியளவில் மங்கள விளக்கேற்றல், மற்றும் சிறுவர் அணிவகுப்பு ஆகியவற்றுடன் ஆரம்பமாகியிருந்த நிகழ்வுகளில் உதயசூரியன் கழகக் கொடியை திரு.தி.கனகசபாபதிப்பிள்ளை அவர்கள் ஏற்றி விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைத்திருந்தார். நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.s.சிறிகாந்தன் (முகாமையாளர், இலங்கை வங்கி, வல்வெட்டித்துறை) கலந்து சிறப்பித்திருந்தார்.
வல்வெட்டித்துறை உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவையொட்டிய, இரண்டாம் நாள் விளையாட்டுப்போட்டிகள் இன்று காலை நெடியகாடு பிள்ளையார் கோவில் பகுதியிலிருந்து ஆரம்பமாகியது.
யாழ்பாணத்தின் வடமராட்சியில் வல்வெட்டித்துறை உட்பட சில பகுதிகளில் நேற்றிலிருந்து ஓரளவு மழை பெய்துவருகின்றது. அதிலும் குறிப்பாக நேற்று இரவு குறிப்பிடக்கூடிய மழை பெய்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஆடிப்பூரத் திருவிழா நேற்று சகல அம்மன் ஆலயங்களிலும் கொண்டாடப்பட்டது. படங்களில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்றிருந்த ஆடிப்பூர திருவிழா நிகழ்வினைக் காணலாம்.
வல்வெட்டித்துறை உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவையொட்டிய, முதல் நாள் விளையாட்டுப்போட்டிகள் இன்று ஆரம்பமாகியது. மிகவும் வித்தியாமான முறையில் நடாத்தப்பட்ட இன்றைய நிகழ்வுகளில் யாழ்பாணத்தில் முதன்முறையாக முப்போட்டிகள் எனும் கோணத்தில் இடம்பெற்றிருந்தது.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமானது (VEDA) ஒவ்வொரு மாத முடிவின் போதும் மாதாந்த செயற்பாட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை போன்றவற்றை வெளியிட்டுவருவது வழமை. இதன் அடிப்படையில் 2013 ஆடி மாதத்திற்கான செயற்பாட்டறிக்கை பொதுமக்களினதும் மற்றும் நலன் விரும்பிகளினதும் கவனத்துக்கு வெளியிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவையொட்டிய, விளையாட்டுப்போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. முதல் நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை 09.08.2013) பி.ப 02.00 மணிக்கு நீச்சல் போட்டி, கட்டுமரம் வலித்தல் , படகோட்டம் , நீச்சல் சைக்கிள் ஓட்டம் அடங்கிய முப்போட்டி....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.