Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை இளைஞர்கள் நடாத்தும் உள்ளூர் கழகங்களுகிடையிலான உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டங்கள் நேற்று தீருவில் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. நேற்றைய போட்டியில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது.
கவிஞர் வாலி இன்று மாலை சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 82. T .S . ரங்கராஜன் எனும் இயற்பெயர் கொண்ட வாலி ,1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கியிருந்தார். கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களைச் சேர்ந்த சுமார் 10000 பாடல்களுக்கு மேல் வரி அமைத்துள்ளார்.
வல்வெட்டித்துறை இளைஞர்கள் நடாத்தும் உள்ளூர் கழகங்களுகிடையிலான உதைபந்தாட்டப் போட்டி நேற்று தீருவில் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. நேற்றைய முதல் போட்டி தீருவில் மற்றம் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகங்கக்கிடையில் இடம்பெற்றிருந்தது.
சிதம்பராகல்லூரியின் வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்த எமது ஊரின் புகழ் பெற்ற கல்விமான்களுள் ஒருவரான R.S.சிவசுப்பிரமணியம் அவர்கள் இறைபதம் எய்திய செய்தி அறிந்து,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள Long Beach இல் (Los Angels) இன் புற நகர் பகுதியில் queen mary எனப்படும் பழைய நீராவிக்கப்பல் எப்படி நிரந்தரமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றதோ அதே போல் புதிய அன்னபூரணியும் காட்சிப்படுத்தப்படவேண்டும்.
இன்று ஆடிப்பிறப்பு தினம் இந்துக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. ஆடிப்பிறப்பையொட்டி இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றது. இன்றைய நாளில் இங்கு யாழ்பாணத்தில் ஆடிக்கூழ் மற்றும் கொழுக்க்கட்டை போன்ற உணவு வகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழப்படுகின்றது.
சிதம்பராக்கல்லூரி வலையமைப்பு (CWN - Chithambara College Well Wishers Network) ஏற்கனவே அறிவித்தபடி கடந்த 14-07-2013 அன்று லண்டனில் பொதுக் கூட்டமொன்றைக் கூடி புதிய நிர்வாக குழுவைத் தெரிவு செய்துள்ளது. இக்குழுவின் முதல் பணியாக சிதம்பராக்கல்லூரி கலை மாலை, கணிதப்போட்டி பரிசளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக CWN அறிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளார் திரு.R.S.சிவசுப்ரமணியம் (S.L.A.S, JP) அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது. பிற்பகல் சுமார் 02:00 மணியளவில் அன்னாரின் கொழும்பு தெகிவளை இல்லத்தில் சமயக் கிரியைகள் நடைபெற்று, இறுதி ஈமைக்கிரியைகள் பிற்பகல் 04:30 மணியளவில் கொழும்பிலுள்ள கனத்தை இந்து மயானத்தில் நடைபெற்றது.
தொண்டைமானாறுசெல்வச்சன்னதி கோவிலில் வாரம்தோறும் வெள்ளிக் கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இத்தினங்களில் தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
பேராசிரியர் திரு.சபா இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், CINEC சார்பாக CINEC யாழ் கிளையின் முகாமையாளர் திரு.இலங்கேஸ்வரனும், Vaiswa சார்பில் அதன் தலைவர் திரு.ரஞ்சனதாஸ், இணைப்பாளர் திரு.சீவரத்தினம் ஆகியோரும் சிறப்புப் பேச்சாளாராக Capt.வைத்தியகுமார் அவர்களும், மற்றும் Capt.பாஸ்கரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிறந்த கல்வியறிவும் நிர்வாகத்திறனும் மனித நேயமும் உயரிய பண்புகளும் மற்றும் அனைவருக்கும் உதவும் மனப்பாங்கும் நிறையவே கொண்டு, எமது சிதம்பராக்கல்லூரியின் வளர்ச்சிக்காய் பெரும் அக்கறையுடனும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றி எம்மையும் எமது மன்றத்தையும் வழிநடாத்திச் சென்ற அன்புள்ளத்தை இழந்து, கண்ணீர் சொரிய நிற்கின்றோம்.
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று (14-07-13) பி. ப 02.45 மணிக்கு, வல்வை உதயசூரியன் கடற்கரையில் திரு .லெ. கிருபாகரன் (தலைவர் விக்னேஸ்வரா பாலர் பாடசாலை) அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் இந்த இரத்ததான நிகழ்வில் இன்று 46 பேர் வரை இரத்ததானம் வழங்கியிருந்தார்கள், இதில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இராணுவ வீரர்களும், மற்றும் முன்னாள் போராளிகள் அடங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு காலமான ஓய்வுபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் திரு.R.S.சிவசுப்ரமணியம் அவர்களின் மறைவையொட்டி சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் மன்றம் (கொழும்புக் கிளை) கவிதை அஞ்சலி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நேற்று இரவு காலமான ஓய்வுபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் திரு.R.S.சிவசுப்ரமணியம் அவர்களின் மறைவையொட்டி சிதம்பராக்கல்லூரி கல்லூரிச்சமூகம் கண்ணீர் அஞ்சலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
நேற்று இரவு காலமான ஓய்வுபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் திரு.R.S.சிவசுப்ரமணியம் அவர்களின் இறுதிக் கிரிகைகள் நாளை மறுதினம் (16-07-13) கொழும்பின் பொரளையிலுள்ள கனத்தை இந்து மயானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஆதிசக்தி வைரவர் ஆலய மகோற்சவம் (13-07-13) அன்று காலை ஆரம்பமாகியது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் 8ம் திருவிழாவான பூங்காவனம் வரும் (20.07.2013) அன்றும், தீர்த்தத் திருவிழா வரும் 22-07-13 அன்றும் நடைபெறவுள்ளது.
R.S என்று அழைக்கப்படும் திரு.R.S.சிவசுப்ரமணியம் அவர்கள் நேற்று காலமானார். இவருக்கு வயது 83. வல்வெட்டிதுறைச் சேர்ந்த திரு.R.S அவர்கள் இலங்கை அரசின் பல உயர் பதவிகளில் பதவி வகித்தவர், அதிலும் குறிப்பாக சுகாதார அமைச்சின் செயலாளராகவும், பின்னர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளாராகவும் கடமையாற்றியிருந்தவர்...........
இன்று யாழ் பல்கலைகழக மாணவர்கள் அணி மற்றும் வல்வை விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கிடையிலானா 5 நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டி பிற்பகல் 0700 மணியளவில் வல்வை பொது விளையாட்டு அரங்கில் (Futsal - 5 a-side football ground) நடைபெற்றது.
தொண்டமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென்பந்தாட்ட தொடரின் அரையிறுதி ஆட்டம் இன்று மாலை தொண்டமானாறு கலைவாணி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய மகோற்சவம் இன்று (13-07-13) காலை ஆரம்பமாகின்றது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 21 ஆம் திகதியும், தீர்த்தத் திருவிழா வரும் 22-07-13 அன்றும் அதனைத் தொடர்ந்து பூங்காவனமும் நடைபெறவுள்ளது.
யாழ் பல்கலைகழக மாணவர்கள் அணி மற்றும் வல்வை விளையாட்டுக் கழகம் மோதும் 5 நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டி இன்று பிற்பகல் 06:30 மணியளவில் நடைபெறவுள்ளது. எமது (Valvettithurai.org) அனுசரணையுடன் நடைபெறவுள்ள இப்போட்டி வல்வை பொது விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வுகளில் மூத்த வல்வை விளையாட்டு வீரர்கள், மாவட்ட வைத்திய அதிகாரி, போலிஸ் உத்தியோகஸ்தர், நெடியகாட்டு இளைஞர் விளையாட்டுக் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். விளையாட்டு வீரர்களை கணபதி படிப்பகப் பாலர்கள் கைலாகு கொடுத்து வரவேற்றிருந்தனர். ரூபா 50/- நுழைவுக் கட்டணம் ஆக இருந்தும் மைதானம் முழுவதும் பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது.
வல்வெட்டித்துறை ஆதிசக்தி வைரவர் ஆலய மகோற்சவம் இன்று (13-07-13) காலை ஆரம்பமாகின்றது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா வரும் 22-07-13 அன்றும் அதனைத் தொடர்ந்து பூங்காவனமும் நடைபெறவுள்ளது.
நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள CDC எடுப்பதில் வழங்கப்பட்டுள்ள சலுகை பற்றி எடுத்துரைக்கப்படும் என அறியமுடிகின்றது. CDC (Continuous Discharge Certificate - மாலுமிகள் சான்றிதழ்) பெறுவதற்கு க.பொ.த (சா/த) ஐ இலங்கை அரசாங்கம் தற்பொழுது கட்டாயம் ஆக்கியுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளர் திரு.ந. அனந்தராஜ் அவர்களின் வீடு உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக அறியவருகின்றது. நேற்றையதினம் நகரசபைத் தவிசாளர் திரு.ந. அனந்தராஜ் அவர்கள் கொழும்பு சென்றிருந்த வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அவரின் கணணி திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டை முன்னிட்டு, அவ் விளையாட்டுக்கழகம் நடாத்தி வரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் இன்று இரவு (12-07-13) மின்னொளியில் நெடியகாட்டு விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
"வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா" இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆசியுரையை திரு. தண்டாயுதபணிக தேசிகர் அவர்களும், வரவேற்புரையை முன்னாள் நாடாளமன்ற உறுப்பினரும், தற்போதைய நகரசபை உறுப்பினருமான திரு.M.K.சிவாஜிலிங்கம்....
சிதம்பரக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பினரால் (CWN) நடத்தபபட்ட கணிதப்போட்டி 2013 இன் பெறுபேறுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி வெளிவருகிறது. இக்கணிதப்போட்டிக்கு 1247 மாணவர்கள் பங்குபற்றி உள்ளார்கள். பரீட்சை பெறுபேறுகளை பெறும்நிலையங்களின் நேர அட்டவணை www.cwnmathschallenge.co.uk இணையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.
வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திசபை மற்றும் வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் (VAISWA) இணைந்து நடாத்தும் இரத்ததான முகாம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.