Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 11ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 24ஆம் திகதி தேர்த் திருவுழாவும், 25ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
வல்வை மண்ணில் பூப்பந்தாட்டம் ஏன் வளரவில்லை என்று வாசகர் ஒருவர் வினா எழுப்பியுள்ளார். அவர் எமக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் "பெண்களுக்கு ஏற்ற இந்த (பூப்பந்தாட்ட) விளையாட்டுக்கு முக்கியம் கொடுக்காமல், ஆண்களுக்கேற்ற கரப்பந்தாட்ட விளையாட்டை, ஏன் ஊரில் பெண்களுக்கு பழக்கி, போட்டிகளுக்கு கொண்டு போகின்றார்கள்?'' என குறிப்பிட்டுள்ளதுடன் ...
பருத்தித்துறை இளையோர் கழகத்தினால் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் கிராம சேவையாளர் பிரிவுகளுக்கிடையில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி நடைபெற்று வந்தது.
வல்வெட்டித்துறையில் NELSIP (North East Local Services Improvement Project - வடக்கு கிழக்கு உள்ளுராட்சி வளர்ச்சித் திட்டம்) திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபா செலவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நண்பகல் 12 மணியளவில் நாட்டப்பட்டது.
வல்வெட்டித்துறையில் NELSIP (North East Local Services Improvement Project - வடக்கு கிழக்கு உள்ளுராட்சி வளர்ச்சித் திட்டம்) திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபா செலவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாடும் வைபவம் இன்று நடைபெறவுள்ளது.
VEDA கல்வி நிலையத்தில் 2012 இல் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றிய 24 மாணவர்களும் க.பொ.த (உ/த) பிரிவில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதை VEDA கல்வி நிலையம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றது.
வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் தாய் சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாக சபைக்கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு, கொழும்பு பழைய மாணவர் மன்றத்தால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை காய்கறிச் சந்தை இதுவரை நடைபெற்று வந்த இடத்தில், புதிய சந்தைக்கான கட்டிட வேலைகள் ஆரம்பித்துள்ள காரணத்தால் சந்தையானது தற்காலிகமாக பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இயங்கி வருகின்றது.
அனைத்து பாடசாலைகளுக்கும் 1ம் தவணை விடுமுறை காலம் இன்றிலிருந்து (05.04.2013) ஆரம்பிக்கின்றது. மீண்டும் 2ம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளுக்கும் 22.04.2013ல் (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படும்.
2012 ஆம் ஆண்டுக்கான க .பொ .த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன . இத் தகவலைப் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவத்தில் (சமூக சேவைகள் அமைச்சு) பணிப்பாளர் - நிர்வாகமும் நிதியும், பணிப்பாளர் - பயிற்சி, பணிப்பாளர் - (சமூக அபிவிருத்தி, கொள்கை ஆராய்ச்சி மற்றும் வெளியீடு), பதிவாளர் II, உதவி நூலகர் II, சிரேஷ்ட விரிவுரையாளர், சிரேஷ்ட பயிற்சி உத்தியோகத்தர்,
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக அரச கரும மொழிகள் தேர்ச்சிப்பரீட்சைக்கு அரசாங்க சேவையிலுள்ள அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. 07/2007 என்னும் சுற்றறிக்கைப் படி 5 வருடங்களுள் அரச கரும மொழித் தேர்ச்சியை பூரணப்படுத்த வேண்டிய அரச (Semi Government) சேவையிலுள்ள அலுவலர்களும், ஆசிரியர்களும் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் .
அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடர் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் வல்வை B விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சல் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சல் விளையாட்டுக்கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 20 வருடங்களாக, மாணவர்களின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி 02.04.2013 அன்று சேவையிலிருந்து ஓய்வு பெறும் கணிதபாட ஆசிரியரும், பகுதித்தலைவருமாகிய (இடைநிலை ) திருமதி சரசரத்தினம் புலேந்திரலிங்கம் (SLTSI, Trd.Maths) அவர்களின் சேவையைப் பாராட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 20 வருடங்களாக, மாணவர்களின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி 02.04.2013 அன்று சேவையிலிருந்து ஓய்வு பெறும் கணிதபாட ஆசிரியரும், பகுதித்தலைவருமாகிய (இடைநிலை ) திருமதி சரசரத்தினம் புலேந்திரலிங்கம் (SLTSI, Trd.Maths)அவர்களின் சேவையைப் பாராட்டி நாளை மதியம் 12.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று காலை 09.30 மணிக்கு பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை ஊறணியைச் சேர்ந்த திரு ராமதாஸ் ரமேஷ் அவர்கள் SLAS (Sri lanka Administrative Service Exam) பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார். இலங்கையில் தற்பொழுது நடைமுறையிலுள்ள பரீட்சைகளில், SLAS பரிட்சையானது மிகவும் முதன்மையானதாகவுள்ளது.
எதிர்வரும் 06.04 2013 அன்று நடை பெறவுள்ள தங்கள் நலன்புரிச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். தங்கள் நிகழ்ச்சி நிரலில், தங்களின் வசதிக்கேற்ப, வல்வையின் பின்வரும் விடயங்களையும், கனடா வாழ் வல்வை மக்களுக்குத் தெரியப்படுத்துவீர்களானால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நாம் பெரிதும் நம்புகின்றோம்.
குழந்தைகளுக்கு அனுபவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். பெற்றோர்கள் தங்களின் அனுபவத்தால் பல விஷயங்களை தெரிந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். எல்லா பெற்றோரும் தாம் ஓர் இலட்சியவாதியாக இருந்து, தம்மைப் பார்த்து குழந்தைகள் பழக வேண்டும் என்று எண்ண முடியாது. பெற்றோர்களிடம் நல்ல பழக்கங்கள் இருத்தல் அவசியமாகும்.
வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் தாய் சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாகசபைக்கூட்டம், கல்லூரிமண்டபத்தில் 24-03-2013 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை ரேவடி ஞான வைரவர் கோவிலில் மணிக்கோபுர கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. மேற்குறிப்பிட்ட ரேவடி ஞான வைரவர் கோவிலின் மணிக்கோபுரமானது திரு. பூ . தேவராசா அவர்களின் குடும்பத்தினரினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
நடைபெற்றுக்கொண்டிருந்த வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று, தீர்த்தத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் புனித வாரத்தை முன்னிட்டு யாழ் மறை மாவட்டத்தின் சக்கோட்டை பங்கின் ஆலயங்களால் ஒழுங்கு செய்யப்பட்ட சிலுவைப்பாதை நேற்று வல்வெட்டித்துறை சென்.செபஸ்தியர் தேவாலயத்தில் நடைபெற்றது.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான நேற்று, தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தின் மற்றைய இடங்களுடன் நோக்குமிடத்து, வல்வெட்டித்துறைப் பிரதேசமானது குறிப்பிடக்கூடிய நெருக்கலான வீடுகளை சிறிய நிலப் பரப்புகளுக்குள் கொண்டுள்ளது. குடும்பங்கள் பல்கிப் பெருகியுள்ள இன்றைய நிலையில், ஒரு கல்யாண வைபவத்தையும் மற்றும் அதனுடன் கூடிய சபையையும், சில 100 குடும்பங்களை அழைத்து மேற்கொள்வது என்பது மிகவும் அசெளகரியமாக மாறியுள்ளது.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான இன்று, தேர் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வருடத்தில் பொதுவாக அதிகளவு பக்தர்கள் பங்குகொள்ளும் நிகழ்வு இதுவாகும்.
நல்லவை பல புரிந்து நம்மை அணைத்திற்கும் அருளாளன்
தம் கருணை வெள்ளத்தில் எம்மை ஆழ்த்தி நிற்கும் தங்காளன்
தொல்லை பல எமக்குற்ற போதும் எமைக்காத்து நிற்கும் நம்பன் -----கவிதை - திரு.வ.ஆ.அதிரூபசிங்கம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.