ISIS இயக்க தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டாரா?
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2014 (திங்கட்கிழமை)
அமெரிக்க போர் விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கின் மொசூல் நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த ISIS இயக்க வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தியபோது, அவ்வாகன தொடரணியில் சென்றுகொண்டிருந்த 10 வாகனங்களும் சிதறடிக்கபட்டதாகவும் அதில் பயணித்த 50க்கு மேற்பட்டோரும் பலியானதாகவும் கூறப்படுகிறது.
மேற்படி தாக்குதலில் பலியானவர்களின் உடல்கள் உடனே மொசூல் நகருக்கு எடுத்துவரப்பட்டதாகவும் , காயமடைந்தவர்கள் மொசூல் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் இருந்த நோயாளர்கள் அனைவரையும் அகற்றிவிட்டு அனுமதிக்கபட்டதாகவும், வைத்தியாசாலையை சுற்றி ISIS இயக்க படையணி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.
இந்த தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க படைகளின் மத்திய கிழக்கு நடவடிக்கை தலைமையகத்தின் பேச்சாளர் பற்றிக் ரைடர் தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை தொடரணியில் ISIS முக்கியஸ்தர்கள் செல்கின்றார்கள் என்று கிடைத்த உளவு தகவலின் பின்தான் தாக்குதல் நடைபெற்றதாகவும் சென்று கொண்டிருந்த 10 வாகனங்களும் சிதறடிக்க பட்டதாகவும் தெரிவித்த வேளை அபு பக்கர் அல் பக்தாதி தொடரணியில்இருந்தாரா என்பதை உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் ஈராக்கிய அரசு தொலைக்காட்சி ISIS இயக்கத்தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்க படைகளால் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் காயமடைந்ததாகவும், பக்தாதியின் உத்தரவுகளை ஏனைய தளபதிகளுக்கு பிறப்பிபவரான அபுசாஜா கொல்லப்பட்டதாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த அதேவேளை பக்காதி என்ன நிலமையில் தற்போது உள்ளார் என குறிப்பிடவில்லை.
அதேநேரம் ISIS இயக்கத்தின் பேச்சாளர் என கூறப்படும் அபு மொகம்ட் அல் அதானி என்பவரது ட்விட்டர் கணக்கில் அல் பக்தாதி விரைவில் வழமைக்கு திரும்ப வேண்டுவதாக குறிப்பிடப்படுள்ளது. மேலும் அந்த டிவிட்டில் நீங்கள் கலீபா தியாகத்துக்குள் முடிவடையும் என்று நம்புகிறீர்களா? எம் தேசத்து கலீபா அரசர் அபு பக்கர் அல் பக்தாதி நலமாக உள்ளதாகவும், அல்லாவுக்கு நன்றி என்றும் பக்காதி விரைவில் குணமடைய பிரார்திக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் சனிக்கிழமையும் ஈராக்-சிரிய எல்லையான அல் குவாதிமில் ISIS இயக்க தலைவர்களின் கூட்டத்தில் இடம்பெற்ற அமெரிக்க விமானத்தாக்குதலயே பக்தாதி கொல்லப்ட்டதாகவும் முரணான செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.