காங்கேசன்துறை துறைமுகம்- காரைக்கால் துறைமுகம் இடையே எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி திட்டமிட்டபடி படகுச் சேவை தொடங்கும். இதற்கான முனைய கட்டம் அமைக்கும் பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது என்று Indsri Ferry Service Pvt Ltd இன் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன் சண்டே ரைம்ஸிடம் தெரிவித்தார்.
இலங்கை கடற்படை தற்போது சுங்க மற்றும் குடிவரவு கட்டிடங்கள், பயணிகளுக்கான புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்பத்தில், படகுகள் வாரத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு பயணத்திற்கு 120 பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சேவை இயங்காது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த படகுப் பயணமானது 04 மணித்தியால பயண நேரம் என்பதுடன் பயணி ஒருவர் 100 kg பொதி வரை கொண்டு செல்ல முடியும் இதற்கான ஒருவழிக்கட்டணமாக - 50 அமெரிக்க டொலர் அறவிடப்படம் என அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#படம்- காங்கேசன்துறை துறைமுகத்தில் கடற்படையினரால் அமைக்கப்படும் சுங்கம் மற்றும் குடிவரவு கட்டடம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.