வல்வெட்டித்துறை போலீஸ் பிரிவுற்பட்ட பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்ப்பட்டது.
இராணுவ புலன்லாய்வுப்பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினால் குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.
வல்வெட்டித்துறை போலீஸ் பிரிவுக்கப்பட்ட பிரதேசத்தில் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து நேற்று முன்தினம் அதிகாலை அங்கு சென்ற இராணுவத்தினர் பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் மறைத்து வைக்கப்ப்ட்டிருந்த நிலையில் 217 கிலோ கேரளகஞ்சா மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் வல்வெட்டித்துறை போலீசாரிடன் கையளிக்கப்பட்டன. குறித்த கேரளகஞ்சா கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மற்றும் இராணுவப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.