லங்காநேசனின் 'கருத்திட்ட முகாமைத்துவம்' நூல் வெளியீடு இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2017 (திங்கட்கிழமை)
திரு.தம்பையா லங்காநேசன் (R.T.D S.L.A.S, B.Com, Diploma in Economic Development and Planning, Certificate and Professional Project Management) எழுதிய கருத்திட்ட முகாமைத்துவம்' (Project management) கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திரு.தம்பையா லங்காநேசன் (R.T.D S.L.A.S, B.Com, Diploma in Economic Development and Planning, Certificate and Professional Project Management) வடமராட்சி கற்கோவளத்தில் பிறந்து, கற்கோவளம் மெத டிஸ்த பாடசாலையிலும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் கல்வி கற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வர்த்தகவியல் பட்டதாரியானார்.
திரு.லங்கா நேசனின் தாய் விஜயலட்சுமி அம்மா பருத்தித்துறை கற்கோவளப் பிரதேசத்தையும், தந்தை தம்பையா மயிலிட்டியையும் பிறப்பிடமாகக் கொண்டவர். மூன்றரை வருடகாலம் இலங்கை கூட்டுறவுச் சம்மேளனத்தின் நிருவாக அலுவலராகப் பணியாற்றினார். இரண்டரை வருடகாலம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் பொருளியல் கணக்கியல் வர்த்தகம் ஆகிய கற்கை நெறிகளில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார்.
படங்கள் - கருத்திட்ட முகாமைத்துவம் புத்தகம், சிதம்பர மாடிக் கட்டட திறப்பு விழாவில்
1973 ஆம் ஆண்டு கிண்ணியா உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றி பின்னர் வவுனியா அரசாங்க அதிபராக கடமையாற்றினார். 1973ம் ஆண்டு வல்வெட்டித்துறை செல்லத்துரை தண்டயல் மகன் கனகராஜாவின் மகள் பத்மராணியை (சட்டத்தரணி திரு.கனகமனோகரனின் சகோதரியை) திருமணம் புரிந்தார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
இலங்கை சுதந்திரமடைந்தபின் சென்ற நூற்றாண்டின் 60 -70 ஆண்டுகள் கொண்ட தசாப்தங்களில் திட்டமிடல் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்கள் அமைக்கப்பட்டு அமுல் செய்யப்பட்டமையை நாம் காண்கின்றோம். இந்தத் தேவையின் அடிப்படையில் திறமைமிக்க நிர்வாகிகளையும் திட்டமிடல் உத்தியோகத்தர்களையும் அரசாங்கம் தெரிவு செய்தது. திட்டமிடல் துறையில் தனக்கென்று ஒருதனி இடத்தை இந்நூலாசிரியர் திரு.லங்காநேசன் பெற்றுக் கொண்டுள் ளார். இவர், மாவட்ட அபிவிருத்திகளுக்குத் திட்டங்களையும் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டங்களையும் மாவட்ட ரீதியாகவும் வெற்றிகரமாக நடாத்தினார்.
தேசிய அடிப்படையில் 1980ம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட பல்துறைசாரந்த புனருத்தா பனக் கருத்திட்டங்களையும் உருவாக்கி அமுல் செய்தமையினால் இவரது சொந்த அனுபவங் களை தழுவி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் பல புத்தகங்கள் இருந்தாலும் தமிழில் இவ்வாறான திட்டமிடல் சார்ந்த நூல்கள் குறைவே. இக்குறைபாட்டை இவரது நூல் நிவர்த்தி செய்கின்றது.
திட்டமிடும் பணியாளர்க்கு மட்டுமல்லாது இதனைக் கற்பிக்கும் ஆசிரியர், அரசாங்க நிர்வாக பரீட்சைக்கு பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ள விடயம் ஆழ்ந்த அனுபவத்தின் வாயிலாகவே வெளிவந்துள்ளது என்பதை பெரு மிதத்துடன் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
திரு & திருமதி உமா நகுலசிகாமணி (வல்வை ஆவணக் காப்பகம்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
N.Thayaparan (srilanka)
Posted Date: May 04, 2018 at 12:12
Really this book is very helpful for our tamil students
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.