வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தாழமுக்கம் (Low pressure)ஒன்று உருவாகியுள்ளது. இத் தாழமுக்கம் எதிர்வாரும் நாட்களில் வடமேற்குத் திசையில் நகர்ந்து தீவிர தாழமுக்கம் (Depression) மாறி புயலாக (Cyclone storm) மாற வாய்ப்புள்ளது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள இலங்கை மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களை அண்மித்து உருவாகும் தாழமுக்க வலயம் எதிர்வரும் 22 ஆம் திகதி மேல் மற்றும் வடமேல் திசை நோக்கி பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்க நிலையானது எதிர்வரும் 24 ஆம் திகதி சூறாவளியாக வலுவடையக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன் பின்னர் வடக்கு மற்றும் வடமேல் திசை நோக்கி பயணிப்பதுடன், எதிர்வரும் 25 ஆம் திகதி மேல் வங்காள கடற்பிராந்தியத்தை அண்மிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீட்டராக அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.