நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2026 (சனிக்கிழமை)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நெல்லியடியில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கூடத்தில் இன்று (21) நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. லெப்டினன் ஆரணியின் தந்தை நற்குணம் ரகுநாதன் பொதுச் சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பொது நினைவுக் கட்டமைப்புக்கு அவர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். கரவெட்டி பிரதேச சபைத் தவிசாளர் சுரேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோரும் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். நவம்பர் 27ஆம் திகதி வரை நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. (பிரதி முகநூலில் இருந்து)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.