மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவபிரானுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படுவது வழமையானதொன்றாகும்.
இன்றைய சிவராத்திரியையொட்டி வல்வை சிவபுரம் வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வர சுவாமி திருத்தல மஹா சிவராத்திரி நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை பிரதோஷ பூஜை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
சிவன் வெள்ளி ரிஷபவாகனத்தில் இரண்டாம் பிரகார திருவீதியுலா தொடர்ந்து மாலை நேர பூஜை திருமுறை பாராயணம் முதலாம் கால அபிஷேக பூஜை சிவராத்திரி புராண படனம் ஓதல், இரண்டாம் கால அபிஷேக பூஜை தொடர்ந்து சகஷ்ர நாம அர்ச்சனைகள், மூன்றாம் கால அபிஷேக பூஜை லிங்கோற்பவ கால விஷேட அபிஷேக லிங்கோற்பவ சிறப்பு பூஜை, வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து வைத்தியநாதன் சந்திரசேகர மூர்த்தங்கொண்டு அழகிய வெள்ளி ரிஷபவாகனத்தில் மூன்றாம் பிரகார வீதியுலா தவில் நாதஸ்வர சகிதம் தொடர்ந்து அர்ச்சனை வழிபாடுகள், நான்காம் கால அபிஷேக பூஜை நிறைவு பெற்று இரவு நேர அர்த்தயாம பூஜை இடம்பெற்று திருக்கதவு சாத்தப்படும். சிவபெருமானுக்கு உகந்த பத்திரமாக வில்வ இலை போற்றப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.