மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் உக்ரேனில் சுட்டு வீழ்த்தபட்டது-295 பேர் பலி!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/07/2014 (வெள்ளிக்கிழமை)
மலேசியன் ஏர்லைன்ஸின் போயிங் 777 ரக MH17 பயணிகள் விமானம் நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்டெர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 280 பயணிகளையும்,15 விமான சிப்பந்திகளையும் ஏற்றிக்கொண்டு பயணித்தவேளை உக்ரேனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சி படைக்கும், உக்ரென் இராணுவத்துக்கும் போர் நடைபெற்ற வரும் Donetsk பகுதியில் சுட்டு வீழ்த்தபட்டுள்ளது. இப்பகுதி ரஷ்யா எல்லையிலிருந்து 40KM தூரத்தில் அமைந்துள்ளது.
இதேவேளை இத்தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த உக்ரேன், தீவிரவாதிகளான கிழக்கு உக்ரேனையும் - ரஷ்யாவையும் இணைப்பதற்காக போராடி வரும் கிளர்ச்சி படையினரே தரையிலிருது வானுக்கு ஏவவல்ல சோவியத்யூனியன் கால SA-11 ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
அதேவேளை உக்ரேனின் கிழக்கு பகுதியில் தம்மை ஒரு நாடாக அறிவித்துள்ள Donetsk மக்கள் குடியரசு நாட்டு தலைவர்கள் உக்கிரேனின் இக்கருத்தை முற்றாக மறுத்துள்ள உக்கிரேனிய இராணுவமே சுட்டு வீழ்த்தியதாகவும் தமது படைகளிடம் 10KM வானுயரத்துக்கு மேல் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தக்கக்கூடிய சூட்டுவலுவுள்ள ஆயுதங்கள் இல்லையெனவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை அவ்நாட்டின் இராணுவ கொமாண்டர் தாம் உக்கிரேனின் Antonov An-26 இராணுவ போக்குவரத்து விமானமொன்றை இவ் MH17 விமானம் கடைசியாக விமானக்கட்டுப்பாட்டு சிஸ்டத்தில் இருந்ததுக்கு அரைமணித்தியாலம் முதல் அதேபகுதியில் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்தார். இது இவ்வாரத்தில் நடைபெறும் இத்தகைய மூன்றாவது தாக்குதல் ஆகும்.
இதேவேளை மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் என நம்பப்படும் சிவப்பு,நீல நிற விமான சிதைவுகளும், நூற்றுக்கு மேற்பட்ட உடல்களும் Hrabove எனும் கிராமத்துக்கு அருகில் 15KM சுற்று வட்டத்தில் பரவிகிடப்பதாகவும் வெளிநாட்டு செய்தி சேவைகள் தெரிவிதுள்ளன. இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் தலைநகர் Donetskக்கு அருகில் உள்ள அதேவேளை ரஷ்யா எல்லையிலிருந்து 40KM தூரத்தில் அமைந்துள்ளது.
Hrabove கிராம உள்நாட்டு விவசாயி ஒருவர் ரொய்ட்டெர்ஸ் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் தான் வயலில் வேலை செய்துகொண்டிருந்த தருணம் விமான சத்தத்தை கேட்டதாகவும் தொடர்ந்து பாரிய அதிர்ச்சியான வெடியோசை கேட்டதாகவும் அதை தொடர்ந்து விமானம் தரையில் வந்து மோதி இரண்டாக பிழந்ததாகவும் தொடர்ந்து அடர்த்தியான கரும்புகை மண்டலம் எழும்பியதாகவும் தெரிவித்தார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் தமது விமானம் இறுதியாக GMT நேரப்படி 1415 க்கு வான் போக்குவரத்து சாதனங்களில் கிழக்கு உக்ரேனின் மேலாக ரஷ்ய எல்லையை நோக்கி 33000 அடி உயரத்தில் பறந்ததாக தெரிவித்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக கிளர்ச்சியாளர்களால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் ராணுவ விமானம், ஹெலிகொப்டர்கள் மீது மேற்கொள்ளப்பட சிறிய ரக ரொக்கெட்களால் வீழ்த்தபடமுடியாமலும் அதேவேளை உக்ரேன் தெரிவித்தபடி ரஷ்யா வழங்கிய SA-11 ரக ஏவுகணையாலும் வீழ்த்தப்படவில்லை. பெரும்பாலும் S-200 ரக ரொக்கெட்டினாலேயே பயிற்சியின்போது தவறுதலாக வீழ்த்தபட்டிருக்கலாம் என தெரியவருகிறது.
இந்த மலேசிய MH17 விமானத்தில் 154 நெதர்லாந்து பிரஜைகளும், 27 அவுஸ்திரேலிய பிரஜைகளும், 43 மலேசியர்களும்,12 இந்தோனேசியர்களும், 9 பிரிட்டிஷ் பிரஜைகளும், 4 ஜெர்மன் பிரஜைகளும், 4 பெல்ஜிய பிரஜைகளும், 3 பிலிப்பைன்ஸ் நாட்டவரும், ஒரு கனடா பிரஜையும் பயணித்துள்ளனர். இது மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு இந்த வருடத்திலேயே இரண்டாவது பாரிய இழப்பாகும். கடந்த மார்ச் மாதம் MH370 விமானம் 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்றவேளை மாயமாக மறைந்திருந்தது.
விமானம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் வீழ்ந்ததால் இடம்பெறவுள்ள விசாரணைகளுக்கான சந்தர்ப்பமும் கடினமாக உள்ளது. அதேநேரம் விமானம் வீழ்ந்த பகுதியில் மக்கள் தேடியதில் விமானத்தின் கறுப்புபெட்டியொன்றினை கண்டுபிடித்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தபட்டதால் மேற்குலகு சார்பான உக்ரேனுக்கும்,ரஸ்யா ஆதரவாளர்களான போராளிகளுக்கும் இடையிலான இடம்பெற்றுவரும் யுத்ததில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும் சர்வதேச விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்கபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தும் அமெரிக்காவை மையமாக கொண்டியங்கும் அமைப்பு ஒன்று எச்சரித்திருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.