மன்னாரில் அமைந்துள்ள திருக்கேதீச்சர பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு இன்று ஆரம்பமாகின்றது. இதனைத் தொடர்ந்து. எதிர்வரும் ஆறாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சிவபெருமான் புவனபதியாக எழுந்தருளியுள்ள உத்தர கைலாயத்திற்கு நிகராக விளங்கும் தட்சிண கைலாயங்கள் என்று அழைக்கப்படுவது திருச்சிராப்பள்ளி, திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம் ஆகிய முப்பெரும் தலங்களாகும்.
இதில், கௌரியம்மை சமேத திருகேதீச்சர பெருமான் திருக்கோயில் இலங்கை மன்னார் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் கேது பகவானால் பூஜிக்கப்பட்டு அருள் பெற்ற தலமாக விளங்குகிறது. ராஜராஜசோழன் காலம் முதல் குலோத்துங்கசோழன் காலம் வரை சோழப் பேரரசர்களால் திருப்பணி செய்யப்பட்ட சிறப்புடையது. சமயக் குரவர்களில் ஞானசம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல் பெற்ற தலமாகும்.
சிறப்பு வாய்ந்த இக்கோயில் பக்தர்களால் கருங்கல் திருப்பணியில் புதுப்பிக்கப்பட்டு எதிர்வரும் ஆறாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று விழாவானது சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. விழாவினை மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்கின்றனர்.
கீழே படங்களில் புதுப் பொலிவுறும் திருக்கேதீச்சரவரத்தின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.