அமெரிக்காவில் நிலையான திரட்டுக்கள் தொகுதி 12 இன் வெற்றியாளாராக செல்வி இலக்கியா சிதம்பரநாதன் தெரிவு செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்தியை எமது இணையதளங்கள் வரிசையில் நாம் முதலாவதாக பிரசுரித்திருந்தோம்.
வெறும் 2 நாட்களில் குறித்த செய்தியை பல்லாயிரம் பேர் நேரடியாக எமது இணையதளத்தில் பார்வையிட்டுள்ளதுடன், இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் 'Share' உம் செய்துள்ளனர்.
இதனைவிட எமது Face book (Valvai Inaiyam) பக்கத்தின் மூலமும் இந்தச் செய்தி பல ஆயிரம் பேர்களைச் சென்றடைந்துள்ளது.
நாம் பதிவேற்றிய பல செய்திகள் பலரைச் சென்றடைந்ததுடன் பல ஊடங்களிலும் செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளன. எமது இணையதளத்தில் வெளியான பல செய்திகள் 1 லட்சம் ‘View’ ஐ நெருங்கும் வேளையில், குறுகிய இடைவெளியில் அதாவது 2 நாட்களில் எமது இணையதளத்தில் அதிக முக்கியத்துவம் பிடித்த செய்தி (ஆங்கிலம் உட்பட) இலக்கியா சிதம்பரநாதன் விருது பற்றிய செய்தியேயாகும்.
எமது இணைய தளத்தில் 2 நாட்களில் 1K 'Share' பெற்ற செய்தியும் இதுவே ஆகும்.
அதிக View களுக்காக ஆபாசாமான செய்திகள், குறுக்குத் தலையங்கள், சாதாராண நிகழ்வுகளை அதிசயங்கள் என வெளியிட்டுவரும் தற்போதைய மீடியா யுகத்தில் – கல்வி சார்ந்த ஒரு செய்தி எமது இணையதளத்திற்கு பெருமை சேர்த்திருப்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று.
இந்தப் பெருமை குறித்த கட்டுரைக்கும், கட்டுரையை வரைந்த இலக்கியா சிதம்பரநாதனையுமே சாரும்.
குறித்த செய்தியை பிரசுரிப்பதற்கு, எமது வேண்டுகோளிற்கிணங்க தகுந்த தகவல்கள் மற்றும் புகைப் படங்கள் வழங்கிய இலக்கியா சிதம்பரநாதனின் முன்னாள் ஆங்கில ஆசிரியர் திரு.கந்ததாசன் (முன்னாள் ஆங்கில ஆசிரியர், உடுப்பிட்டி மகளிர் கல்லூரி) மற்றும் இலக்கியா சிதம்பரநாதனுக்கு வாசகர்கள் சார்பில் எமது நன்றிகள்.
இது போன்ற செய்திகளை வரவேற்கும் வாசகர்களுக்கும் இத்தருணத்தில் எமது நன்றிகள்.
தொடர்பட்ட செய்தி
உடுப்பிட்டிமகளிரில் கல்வி பயின்ற இலக்கியா சிதம்பரநாதனுக்கு அமெரிக்காவின் அதியுயர் சர்வதேச விருது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.