வல்வையின் கல்விமான்களில் குறிப்பிடக்கூடியவரான முன்னாள் பருத்தித்துறை மற்றும் திருகோணமலை பிரதேச செயலரும், வடகிழக்கு மாகாண அரசின் மாகாண நிர்வாக அமைச்சின் செயலாளருமான திரு.வேலும் மயிலும் (S.L.A.S) அவர்கள் இன்று காலை யாழில் காலமானார். இவருக்கு வயது 83.
தனது பணிக் காலத்தில் அரச சேவைக்குப் அப்பால் பொது மக்களுக்கு பல சேவைகளை இவர் இலவசமாக வழங்கியிருந்தார். இதனால் வல்வை ஊரணிக்கு தெற்குப் பக்கத்தில் திரு.வேலும்மயிலும் அவர்கள் வசித்துவந்த வீட்டின் ஒழுங்கை ‘A G A லேன் என அழைக்கப்பட்டு இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அண்மைக் காலம் வரை அரச சார்பற்ற மற்றும் அரச அதிகாரிகளுக்கு பல இலவச ஆலோசனைகளை இவர் வழங்கி வந்திருந்தார்.
இவரின் சேவையைக் பாராட்டும் முகமாக கடந்த 2012 ஆம் ஆண்டு வல்வை மக்களால் திரு.வேலும்மயிலும் அவர்கள் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கு நான்கு பிள்ளைகள் உண்டு.
அன்னாரின் பூதவுடல் நாளை மதியம் 1.30 மணிவரை (இல 65 அரியாலை ஸ்ரான்லி கல்லூரிக்கு முன்பாக) நாவலர் வீதி, அரியாலை எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், 'AGA ஒழுங்கை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இறுதிகிரியைகளுக்காக எடுத்து செல்லப்பட்டு, ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு திரு.வேலும்மயிலும் அவர்களுக்கு வல்வை மக்களால் வழங்கப்பட்ட கெளரவிற்பு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.s.thurai (Denmark)
Posted Date: March 20, 2018 at 21:15
மறக்க முடியவில்லை..
சிரித்த முகம்..
இலஞ்சம் இல்லாத சேவை..
பார்வையால் அளந்தெடுக்கும் பக்குவம்...
சேவைக்கே பிறந்த செம்மல்..
எல்லோரும் போற்றும் ஒருவர்..
நல்லவர் வல்லவர் ஒருவரை..
வல்வையின் உத்தியோக மரபில்
சிகரம் தொட்ட ஒருவர்..
களம் பல கண்ட சேவை..
மறக்க முடியாத மனிதர்..
என்வாழ்வில் பல அத்தியாயங்களில்
அவர் இருந்தார்..
என்னை அவரும் அவரை
நானும் என்றும் மதித்தோம்..!
பிரிந்தும் பிரியாத நினைவுகள்..
ஆற்றல் மிக்க பிள்ளைகளை
அவனிக்கு தந்து செல்கிறார்..
வைத்திலிங்கம் அப்பாவோடும்..
அருமை ஞானமூர்த்தி அப்பாவோடும்
ஆறுதலாக அவ்வுலகில் அமர்ந்தார்..
உங்களை பார்த்த வாழ்வு
அழிந்தும் அழியாத காலக் கற்பனை
ஐரோப்பாவில் இருந்து பார்க்கும்
தூரத்து ஓவியத்தின் யாத்திரை..
நிலவட்டும் சாந்தி..!
குடும்பத்தினர்க்கு ஆறுதலும்
அன்னாருக்கு ஆத்ம சாந்தியும் கிட்ட
ஆண்டவனை வேண்டுகிறேன்..
கி.செ.துரை டென்மார்க்
Vyramuthu Balasubramaniam (canada)
Posted Date: March 20, 2018 at 18:33
MY HEART FELT CONDOLENCES TO HIS FAMILY
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.